Thursday, May 24, 2007

ஈமானின் நிலைகள்-விதியை நம்புதல்

குர்ஆன் ஹதீஸில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதை அப்படியே நம்பவேண்டும். விதி நம்பிக்கைகளில் ஒன்றாகும். மார்க்கத்தின் சட்டதிட்டங்களை விரிவாக நம் சிந்தனையை செலுத்தி அலசி ஆய்வது போல் விதியைப் பற்றி ஆராயக்கூடாது.

விதியைக் கீழ்கண்டவாறு நம்புதல் வேண்டும்

1. நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கின்ற, நடக்கவிருக்கின்ற அனைத்து விஷயங்களும் அதன் அறிவும் அல்லாஹ் நன்கறிந்தவன் என நம்புவது.

2. நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கின்ற, நடக்கவிருக்கின்ற இவை அனைத்தும் ஏற்கனவே எழுத்தப்பட்டுவிட்டன.

3. இவ்வுலகில் நடக்கும் அனைத்துக் காரியங்களும் ( மனித மற்றும் பிற ஜீவராசிகளின் ) அல்லாஹ்வின் விருப்பபடியே நடக்கின்றன. ( செயல்படுகின்றன )

4. படைப்பினங்களுக்கு அதிபதியான அல்லாஹ்வே இவ்வனைத்தையும் நிகழ்த்துபவன்.

மனிதனுக்கும் அல்லாஹ்வுக்கும் உள்ள தொடர்பு

1. மனிதனுக்கு அல்லாஹ் அறிவை வழங்கியிருக்கிறான். இது பிற ஜீவராசிகளை விட மனிதனுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் மிகப்பெரும் அருட்கொடையாகும்.

2. பகுத்தறிவால் ஆராய்ந்து நலன் தரக்கூடியதைப் பிரித்து அறிந்து அதன்படி செயல்படும் தீர்ப்பையும் ஆற்றலையும் அவனுக்கு அல்லாஹ் வழங்கியுள்ளான்.

3. மனிதனை நேர் வழிப்படுத்த அல்லாஹ் நபிமார்களை அனுப்பி அவர்களுக்கு நேர்வழிக் காட்டும் வேதங்களை வழங்கி நல்லதை கெட்டதை நன்றாக உணர்த்தியிருக்கிறான்.

4. நல்லதை கெட்டதைத் தேர்வு செய்யும் பொறுப்பும் மனிதனிடமே விடப்பட்டுள்ளது. எனவே அவனின் நல்லறங்களுக்கு நற்கூலியும் தீயவைகளுக்கு தண்டனையும் மறுமையில் அல்லாஹ் வழங்குகிறான்.

5. அல்லாஹ் எவருக்கும் அநீதம் செய்பவனல்ல.

90:10. அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.

76:3. நிச்சயமாக, நாம் அவனுக்கு வழியைக் காண்பித்தோம்; (அதைப் பின்பற்றி) நன்றி உள்ளவனாக இருக்கின்றான்; அல்லது (அதைப்புறக்கணித்து) நன்றியற்றவனாக இருக்கின்றான்.

4:165. தூதர்கள் வந்தபின் அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்கு (சாதகமாக) ஆதாரம் எதுவும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, தூதர்கள் (பலரையும்) நன்மாராயங் கூறுபவர்களாகபும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பினான்); மேலும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பேரறிவாளனாகவும் இருக்கின்றான்.

2:286. அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே! அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்;) ''எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!''

4:40. நிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்) ஓர் அணுவளவு கூட அநியாயம் செய்ய மாட்டான்; (ஓர் அணுவளவு) நன்மை செய்யப்பட்டிருந்தாலும் அதனை இரட்டித்து, அதற்கு மகத்தான நற்கூலியை தன்னிடத்திலிருந்து (அல்லாஹ்) வழங்குகின்றான்.

நன்மையும், தீமையும் அல்லாஹ்விடமிருந்து

4:78. ''நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! (போருக்குச் சென்ற முனாஃபிக்களுக்கு) ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் ''இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது'' என்று கூறுகிறார்கள்; ஆனால், அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டாலோ, ''இது உம்மிடம் இருந்துதான் ஏற்பட்டது'' என்று கூறுகிறார்கள், (நபியே! அவர்களிடம்) கூறும்; ''எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்திருக்கின்றன. இந்த மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எந்த ஒரு விஷயத்தையும் அவர்களுக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லையே!''

4:79. உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது. இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது. (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு (இவற்றை எடுத்துக் கூறுவதற்காகத்) தூதராகவே அனுப்பியுள்ளோம் - (இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான்.

மன்னு ஸல்வா - பனீஇஸ்ராயிலர்களுக்கு

ஹதீஸ் எண் : 2235 தரம்:- ஹஸன்

ஒரு அடியான் ஒரு இடத்தில் மரணிக்க வேண்டும் என்று இறைவன் விதித்திருந்தால் அவ்விடத்தில் அவனுக்கு ஒரு தேவையை ஏற்படுத்துவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக மதர் பின் உகாமிஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

கல்மழை - லூத்நபி சமுதாய மக்கள்

நன்மையும், தீமையும் அல்லாஹ்விடமிருந்தே. நற்கருமங்களுக்கு கூலியும் பாவத்திற்கு தண்டனையும் என்று நம்புதல் வேண்டும்

முயற்சி செய்யவேண்டும் (அல்லாஹ் நாடினால் நாங்கள் பாவம் செய்ய மாட்டோம்) எனக் கூறவேண்டும்

6:148. (அல்லாஹ்வுக்கு இணை வைக்கும்) முஷ்ரிக்குகள் ''அல்லாஹ் நாடியிருந்தால், நாங்களும் எங்கள் மூதாதையர்களும் இணை வைத்திருக்க மாட்டோம்; நாங்கள் எந்தப் பொருளையும் (எங்கள் விருப்பப்படி) ஹராமாக்கியிருக்கவும் மாட்டோம்'' என்று கூறுவார்கள் - இப்படித்தான் இவர்களுக்கு முன் இருந்தவர்களும் நமது தண்டனையை அனுபவிக்கும் வரை பொய்ப்பித்துக் கொண்டிருந்தார்கள்; (ஆகவே அவர்களை நோக்கி,) இதற்கு உங்களிடம் ஏதாவது ஆதாரம் உண்டா? இருந்தால் அதை எமக்கு வெளிப்படுத்துங்கள்; (உங்களுடைய வீணான) எண்ணங்களைத் தவிர வேறெதையும் நீங்கள் பின்பற்றவில்லை நீங்கள் பொய் வாதமே புரிகின்றீர்கள்'' என்று (நபியே!) நீர் கூறும்.

8:28. ''நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு'' என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.

8:29. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்; இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான்; ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன்.

ஹதீஸ் எண் : 2231 தரம்; :- கரீப்

நல்லவை தீயவை யாவும் விதிப்படியே நிகழ்கின்றன. ஓருவருக்கு எது ஏற்படுகிறதோ அது தவறிவிடக் கூடியதன்று. எது தவறி விட்டதோ அது ஏற்படக்கூடியதன்று என்று உறுதியாக நம்பாதவரை ஒருவர் முமீனாக முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

ஹதீஸ் எண் : 2232

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர யாருமில்லை: நான் அல்லாஹ்வின் தூதர். என்னை இறைவன் சத்தியத்துடன் அனுப்பினான் என்று உறுதியாக நம்பாத வரை மரணம், மரணத்திற்க்கு பின் எழுப்படுதல், விதி ஆகியவற்றை நம்பாதவரை ஒருவர் மூமினாக முடியாது என்று நபி (ஸல்) கூறியதாக அலி (ரலி) அறிவிக்கிறார்கள்.

ஹதீஸ் எண் : 2245 தரம்; :- ஹஸன் ஸஹீஹ் கரீப்

வானங்களையும், பூமியையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் எல்லா விதிகளையும் அல்லாஹ் தீர்மானித்து விட்டான் என்று நபி (ஸல்) கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அறிவிக்கிறார்கள்.

ஹதீஸ் :

நிச்சயமாக அல்லாஹ் எழுதுகோலை படைத்து எழுது என்று கட்டளையிட்டான். எதை எழுத என்று அது கேட்டது. அதற்கு அவன் இப்போது ஆகியிருப்பதையும் இனிமேல் உலக இறுதிவரை ஆகப் போவதின் விதியையும் எழுது எனக் கூறினான்.

திர்மிதி : உபாதா பின் ஸாமித் (ரலி)

விதி எந்த படிவத்தில் உள்ளது? ஏடு வடிவத்தில் உள்ளது.

6:59. அவனிடமே மறைவனவற்றின் திறவுகோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனின்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடவிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை.

54:52. அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் (அவர்களுக்கான) பதிவேடுகளில் இருக்கிறது.

57:22. பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை. நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.

11:6. இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை. மேலும் அவை வாழும் இடத்தையும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன.

நமக்கும் விதிக்கும் உள்ள தொடர்பு

ஹதீஸ் எண் : 2219 தரம்; :- ஹஸன் ஸஹீஹ்

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் தரையை கிளறிக் கொண்டிருந்தார்கள். திடீரெனத் தலையை வானத்தை நோக்கி உயர்த்தி '' உங்களில் எவராக இருந்தாலும் சொர்க்கத்தில் அவருக்குள்ள இடமும், நரகத்தில் அவருக்குள்ள இடமும் பதிவு செய்யப்படாமல் இருப்பதில்லை'' என்று கூறினார்கள். அப்போது நபிதோழர்கள் '';அல்லாஹ்வின் தூதரே நாங்கள் செயல்படாமல் இருக்கலாம் அல்லவா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் '' கூடாது ! நீங்கள் செயல்படுங்கள். ஓவ்வொருவருக்கும் எதற்காக படைக்கப்படடுள்ளனரோ அதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளனர் என்று விடையளித்தார்கள். இதை அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - புகாரி, முஸ்லீம்;

ஹதீஸ் எண் : 2220 தரம்; :- ஹஸன் ஸஹீஹ்

உங்களில் ஒருவரைப் படைக்கும் போது தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் (விந்து நிலையில்) வைக்கப்படுகிறார்கள். பின்னர் அதே கால அளவுக்கு கருவறைச் சுவற்றில் ஒட்டிக் கொணடடிருக்கும் நிலையை அடைகிறார். பின்னர் அவரிடம் அல்லாஹ் வானவரை அனுப்புகிறான். அவர் உயிரை ஊதுகிறார். நான்கு விசயங்களை எழுதுமாறு அவர் கட்டளையிடப்படுகிறார். (அதற்கேற்ப) அவரது செல்வம், தவணை, அவரது செயல்பாடு, அவர் பாக்கியசாலியா? என்ற விபரம் ஆகிய நான்கு விஷயங்களை அந்த வானவர் பதிவு செய்கிறார். எவனைத் தவிர வேறு கடவுள் இல்லையோ அவன் மேல் ஆணையாக! உங்களில் ஒருவர் தமக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரே ஒரு முழம் மட்டுமே இருக்குமளவுக்கு சொர்க்கவாசி செயல்களைச் செய்து வருவார். விதி அவரை வென்று முடிவில் நரகவாசிகளின் செயலைச் செய்து நரகில் நுழைவார். மேலும் உங்களில் ஒருவர் தமக்கும் நரகத்திற்க்கும் ஒரு முழம் மட்டும் உள்ள அளவுக்கு நரகவாசிகளின் செயல்களைச் செய்து வருவார். விதி அவரை வென்று சொர்க்கவாசிகளின் செயல்களைச் செய்து சொர்க்கத்தில் நுழைவார் என்று நபி (ஸல்) கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ரலி) அறிவிக்கிறார்கள்.

எதிர்காலச் செய்திகள் என்ன நடக்கும் என்பதை அல்லாஹ்வைத் தவிர எவரும் அறிந்துக் கொள்ளமுடியாது. கிளி ஜோஸ்யம், குறி, கைரேகை சாஸ்திரம், சகுணம், பால் கித்தாபு பார்த்தல் ஆகிய இவை அனைத்தும் இம்மை மறுமை நஷ்டத்தை நமக்கும் ஏற்படுத்தும்.

இன்ப துன்பத்தில் விதியை நம்பியவரின் நிலை

9:51. ''ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது. அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்'' என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!

No comments:

 
#b-navbar { height: 0px; visibility: hidden; display: none; }