Thursday, December 30, 2004

முஸ்லீம் சகோதரா சிந்தித்துப் பார்!

அன்பான என் மார்க்கத்தின் சகோதரர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இந்த குர்ஆன் வசனங்களை உற்று நோக்குங்கள்.

2:214. உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு
ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே
சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள்
எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி
போன்ற) கஷ்டங்களும், துன்பங்களும் பீடித்தன;
"அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்" என்று
தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும்
அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள்;
"நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே
இருக்கிறது" (என்று நாம் ஆறுதல் கூறினோம்)

3:14. பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும்,
வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்;
அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு,
மாடு ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி
நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை
மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை
(யெல்லாம் நிலயற்ற) உலக வாழ்வின்
சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான
தங்குமிடமுண்டு.

8:25. நீங்கள் வேதனைக்கு பயந்துக் கொள்ளுங்கள்;
அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்
தான் குறிப்பாக பிடிக்கும் என்பதில்லை - நிச்சயமாக
அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன்
என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.

10:62. (முஃமின்களே) அறிந்து கொள்ளுங்கள்;
நிச்சயமாக அல்லாஹ்வின் நேயர்களுக்கு எவ்வித
அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும்
மாட்டார்கள்.

21: 23. அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக்
கேட்க முடியாது;ஆனால், அவர்கள் தாம் (அவர்கள்
செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள்.

21:35. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச்
சுவைப்பதாகவே இருக்கிறது; பரிட்சைக்காக
கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம்
உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே
நீங்கள் மீட்கப்படுவீர்கள்.

17:58. இன்னும் கியாம நாளைக்கு முன்னே
(அழிச்சாட்டியம் செய்யும்) எந்த ஊரையும் நாம்
அழிக்காமலோ, அல்லது கடுமையான வேதனைக்
கொண்டு வேதனை செய்யாமலோ இருப்பதில்லை; இது
(லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) ஏட்டில்
வரையப்பெற்றே இருக்கிறது.

39:49. மனிதனை ஏதேனும் ஒரு துன்பம்
தீண்டுமானால் அவன் நம்மையே (பிரார்த்தித்து)
அழைக்கிறான்; பிறகு, நம்மிடமிருந்து ஒரு
பாக்கியத்தைக் கொடுத்தோமானால்; அவன்: இது
எனக்குக் கொடுக்கப்பட்டதெல்லாம், என் அறிவின்
காரணமாகத்தான்!" என்று கூறுகிறான். அப்படியல்ல!
இது ஒரு சோதனையே - ஆனால் அவர்களில்
பெரும்பாலோர் இதை அறியமாட்டார்கள்.

இன்சா அல்லாஹ்.

மீண்டும் இறை வசனங்களுடன் சந்திப்போம்,

No comments:

 
#b-navbar { height: 0px; visibility: hidden; display: none; }