Monday, January 17, 2005

நமக்கு உதவியாளன் யார்?

(நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாத வரையில் உம்மைப் பற்றி திருப்தியடைய மாட்டார்கள்; (ஆகவே, அவர்களை நோக்கி) " நிச்சயமாக அல்லாஹ்வின் வழி - (இஸ்லாம்) அதுவே நேர்வழி' என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை. (2:120)

(அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால்) நீர் இவ்வாழ்நாளில் இருமடங்கு (வேதனையும்,) மரணத்தில் இருமடங்கு வேதனையு)ம், நுகருமாறு நாம் செய்திருப்போம், பின்பு, நமக்கு எதிராக உமக்கு உதவியாளர் எவரையும் நீர் காணமாட்டீர். (17:75)

நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய பாதுகாவலன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவன் பாதுகாப்பதிலும் மிகச் சிறந்தவன்; இன்னும் உதவி செய்வதிலும் மிகவும் சிறந்தவன். (8:40)

நிச்சயமாக வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. (அவனே) உயிர் கொடுக்கிறான்; (அவனே) மரிக்கும்படி செய்கிறான். அல்லாஹ்வைத் தவிர உங்களுக்கு வேறு பாதுகாவலரும் இல்லை; உதவியாளரும் இல்லை. (9:116)

(நபியே!) அல்லாஹ்வையே நீர் முற்றிலும் நம்புவீராக; அல்லாஹ்வே (உமக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன். (33:3)

அல்லாஹ் உங்களுக்குக் கெடுதியை நாடினால், அவனிடமிருந்து உங்களைப் பாதுகாப்பவர் யார்? அல்லது அவன் உங்களுக்கு ரஹ்மத்தை கிருபையை நாடினால் (அதை உங்களுக்கு தடை செய்பவர் யார்?) அல்லாஹ்வையன்றி (வேறு யாரையும்) பாதுகாவலனாகவும், உதவியாளனாகவும் அவர்கள் காண மாட்டார்கள்." என்று (நபியே!) நீர் கூறுவீராக. (33:17)

No comments:

 
#b-navbar { height: 0px; visibility: hidden; display: none; }