Saturday, March 12, 2005

பாடம் - 10

அல்லாஹ்வைத் தவிர ஏனையவைகளின் மீது நேர்ச்சை வைப்பது ஷிர்க்கான செயலாகும்.

"இவர்கள் (தங்கள்) நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள்; இன்னும் ஒரு நாளையும் பயப்படுவார்கள்; அதம் தீமை எங்கும் பரவியதாக இருக்கும்." என அல்லாஹ் கூறுகின்றான். (76:7)

"(நன்மைக்காக) செலவு வகையிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்த போதிலும் அல்லது நேர்ச்சையிலிருந்து நீங்கள் எதை நேர்ச்சை செய்த போதிலும் அதனை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்; அன்றியும் அநியாயக்காரர்களுக்கு உதவி செய்வோர் (வேறு எவரும்) இல்லை" (2:270)

"அல்லாஹ்வுக்கு கீழ்படிந்து நடப்பதாக யாரேனும் உறுதியுடன் நேர்ச்சை வைத்தால்; அவர் அல்லாஹ்வுக்கு கீழ்படிந்து அதனை நிறைவேற்றட்டும். அல்லாஹ்வுக்கு கீழ்படியாமல் நடப்பதாக யாரேனும் நேர்ச்சை வைத்தால், அவர் அதனை நிறைவேற்றாது இருக்கட்டும்." என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி.

இப்பாடத்தின் முக்கிய அம்சங்கள்:

* யாரேனும் நேர்ச்சை வைத்தால் அதனை நிறைவேற்றுவது கட்டாயக் கடமையாகும். நேர்ச்சை வைப்பது அல்லாஹ்வின் வணக்கத்தைச் சார்ந்த செயலில் ஒன்றாகும். அதனால் அல்லாஹ் அல்லாத ஏனையவைகள் மீது நேர்ச்சை வைப்பது ஷிர்க்கான செயலாகும். அல்லாஹ்வின் கட்டளைக்கு முரணான காரியங்களைச் செய்வதாக யாரேனும் நேர்ச்சை வைத்தால் அதனை செயல் படுத்த அவருக்கு அனுமதி இல்லை.

"ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டிய 32 முக்கிய பாடங்கள்" என்ற நூலில் இருந்து.

அரபி மூலம்: அப்துல் அஸீஸ் அல் ஸோமர்.
தமிழ் மொழி பெயர்ப்பு: ஜாஸிம் பின் தய்யான்.

இன்னும் வரும்.

 
#b-navbar { height: 0px; visibility: hidden; display: none; }