அல்லாஹ் தன் திருத்தூதர் வாயிலாக நமக்கு விதித்தவற்றைக் கொண்டு நாம் அவனை வணங்க வேண்டும். அப்படியானால் வாஜிப் (கடமை), முஸ்தஹப் (ஸுன்னத்) போன்ற விதிகளுக்குட்பட்ட வழிபாடுகளை நாம் புரிய வேண்டும். இந்த அடிப்படையில் நாம் பார்ப்போமானால் சிருஷ்டிகளையும், மய்யித்துகளையும், மறைந்தவர்களையும் அழைத்து பிரார்த்தித்து அவற்றிடம் உதவி தேடினால் (அதை அல்லாஹ், ரஸூல் யாருமே கடமை என்றோ, ஸுன்னத் என்றோ நமக்கு விதிக்காமலிருக்கும் நிலையில்) இப்படிச் செய்பவன் நிச்சயமாக பித்அத்காரனாக மாறி விடுகிறான். இந்த பித்அத் என்பது ஷிர்க் (இணை வைத்தல்) ஆகும். ஆகவே அனைத்துலக இரட்சகனுக்கு இணை வைத்து விடுகின்றவனாகி விட்டான். இத்தகைய பித்அத்களுக்கு மார்க்கத்திலும் ஆதாரமில்லை. இதைப் பிறருக்குப் போதிக்கிறவன் அல்லாஹ் இறக்கி வைக்காத விதிகளைக் கொண்டு ஏவுபவனாக மாறி விடுகின்றான். இவனது இவ்விதிகளை எடுத்து முஸ்லிம்கள் செயல்படக் கூடாது. இத்தகைய பித்அத்காரர்கள் அவசியம் தண்டிக்கப்படுவார்கள். இவர்கள் தம் குற்றத்திலிருந்து விடுபடுவதற்காக தௌபா செய்ய சொல்ல வேண்டும் இவையனைத்தும் இத்தகைய பித்அத்காரர்கள் விஷயத்தில் அறிஞர்கள் தீர்ப்புகளாகும். மத்ஹபுடைய நான்கு இமாம்களும் இவ்வாறுதான் குறித்துள்ளார்கள்.
இத்தகைய சட்டங்களைப் பற்றி அதிகமான விளக்கங்களை வேறு பல தொகுப்புகளில் கூறி இருக்கிறேன். அவற்றை நான் இங்கே எடுத்துக் கூற விரும்பவில்லை. விரும்புகிறவர்கள் அந்த நூல்களில் இவற்றைப் படித்துக் கொள்ளட்டும்.
ஹிஜ்ரி 711-ம் ஆண்டு நான் எகிப்திலிருந்த போது என்னிடம் நபியைக் கொண்டு வஸீலா தேடுவது குறித்து ஒரு பத்வா கேட்கப்பட்டது. அதற்கு நான் மிக விளக்கமான பதில் எழுதி இருந்தேன். அந்த பத்வாவை இங்கும் குறிப்பிடுவதற்கு விரும்புகிறேன். அதில் ஏராளம் பயன்கள் இருக்கின்றன. ஏனெனில் இவை ஏகத்துவம் சம்பந்தமான சட்டங்களாகும். இணை வைப்பதை அடியோடு பிடுங்கி எறிகின்ற ஒரு மஸ்அலா பற்றியதல்லவா! எனவே இதன் விளக்கம் எவ்வளவு தூரம் விரிந்து செல்கிறதோ அவ்வளவு தூரம் சட்டங்கள் தெளிவு பெறுகின்றன.
Friday, November 25, 2005
தூய இஸ்லாத்தின் இரண்டாவது அடிப்படை
இன்ஷா அல்லாஹ் தொடரும்...