Saturday, March 05, 2005

பாடம் - 8

மரங்கள், கற்கள் போன்றவைகளில் ஆசி தேடும் மக்கள்.

உயர்ந்தவனாகிய அல்லாஹ் கூறுகிறான்: 'நீங்கள் (வணங்கும்) லாத்தையும் உஜ்ஜாவையும் கண்டீர்களா? மற்றொன்றாகிய மூன்றாவதான மனாத் (என்னும் பெண் விக்கிரகத்)தையும் நீங்கள் கண்டீர்களா?' (53:19-20)

அபு வகீத் அல்-லயித்தி (ரலி) அறிவிக்கிறார்கள்: 'குப்ரை விட்டும் நீங்கிய புதிதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு முறை ஹுனைன் நோக்கிப் பிரயாணம் செய்தோம். வழியில் முஷ்ரிக்குகள் தாத் அன்வாத் என்ற பெயரில் ஒரு இழந்தைப்பழ மரத்தில் தம் ஆயுதங்களைத் தொங்கவிட்டு, அங்கு இளைப்பாறிச் செல்வதைக் கண்டோம். 'அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கும் இதனைப் போன்றதொரு தாத் அன்வாத் ஒன்றை செய்துக் கொடுப்பீர்களா? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அல்லாஹ் அக்பர், என் உயிர் யார் கையில் இருக்கிறதோ, அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக நிச்சயமாக கடந்துபோன சமுதாயங்களின் வழிமுறை இதுவாகும். பனு இஸ்ராயில்கள் மூஸா (அலை) அவர்களிடம் அவர்களுக்கு தெய்வங்கள் இருப்பதைப்போல் எங்களுக்கும் ஒரு தெய்வத்தை (நாங்கள் வணங்குவதற்கு) ஆக்கிவைப்பீராக என்று கேட்டதைப் போல் நீங்களும் கேட்கிறீர்கள். அதற்கு மூஸா நிச்சயமாக நீங்கள் அறியாதவர்களான ஒரு கூட்டத்தினராவீர்கள் என்று கூறினார்.' (7:138) என்று பதில் கொடுத்தார்கள்.

இப்பாடம் காட்டும் முக்கிய அம்சங்கள்:

* தாத் அன்வாத் போன்றதொரு மரமொன்றை சஹாபாக்களில் சிலர் கோரிய முறை.

* இச்செயல் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதும், அதன் மூலம் அல்லாஹ்வுக்கு மேலும் அருகில் நெருங்கக் கூடிய வழியென்றும் என அவர்கள் பிழையாகக் கருதினார்கள்.

* அவர்களுடைய கோரிக்கையை நிராகரிக்கும் போது அல்லாஹ் அக்பர் கடந்து போன சமூகங்களின் வழிமுறை இதுவாகும் எனக்கூறி இது எவ்வளவு பாதகமான விஷயம் என்பதை நபி (ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.

* தாம் செய்ய நாடிய காரியத்தின் தன்மையைப்பற்றி ஆரம்பத்தில் சில சஹாபாக்கள் கூட அறிதிருக்கவில்லை என்றால், அதற்கு நீண்ட காலத்தின் பின் வந்த சமூகங்கள் இவ்விஷயம் பற்றிய அறியாமையில் மூழ்கி இருப்பது ஆச்சர்யமல்ல.

* லா இலாஹ இல் அல்லாஹ் - வணக்கத்துக்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேரு யாருமில்லை என்ற சாட்சியத்தில் (ஷஹாதாவில்) மறைந்திருக்கும் அர்த்தத்தில், இப்படிப்பட்ட செயல்கள் யாவும் தடுக்கப்பட்டுள்ளன என்பதை பெறும்பான்மையான மக்கள் அறிவதில்லை.

* பெரிய ஷிர்க், சிரிய ஷிர்க் என் இருவகை ஷிர்க் உள்ளன. அதனால் தங்கள் கோரிக்கையின் ஒரே காரணத்துக்காக சஹாபாக்கள் யாரும் முஷ்ரிக்குகளாக மாரவில்லை.

* முஹம்மத் (ஸல்) அவர்களிதனை விளக்கிய போது பொதுவாக மனிதனின் தன்மை இதுவென சுட்டிக் காட்டினார்கள்.

* யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் குர்ஆனில் அல்லாஹ் கண்டிக்கும் ஒவ்வொரு முறையும் அப்படிப் பட்ட காரியங்களைப் பற்றி நமக்கும் எச்சரிக்கை செய்துள்ளான்.

* ஒருவர் பொய்யை விட்டும் நீங்கி, இறை நம்பிக்கைக் கொண்டு இஸ்லாத்தின் வாழ்க்கை முறையை அறிந்து, அவற்றைப் பின்பற்ற தொடங்கியவுடன் தன் பழைய பழக்க வழக்கங்களை விட்டும் முழுமையாக நீங்கிவிட்டார், என உறுதியாக கூறமுடியாது. நாங்கள் குஃப்ரை விட்டும் நீங்கிய புதிதில்.... என்று சஹாபாக்கள் கூறியது இதற்கு சான்றாகும்.

"ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டிய 32 முக்கிய பாடங்கள்" என்ற நூலில் இருந்து.

அரபி மூலம்: அப்துல் அஸீஸ் அல் ஸோமர்.
தமிழ் மொழி பெயர்ப்பு: ஜாஸிம் பின் தய்யான்.

இன்னும் வரும்.

 
#b-navbar { height: 0px; visibility: hidden; display: none; }