Wednesday, May 10, 2006

நேசகுமார் என்ற நெருஞ்சி முள்

நெருஞ்சி முள்! தன்னுடைய உடலின் அனைத்துப்
பகுதிகளையும் மனிதனை வதைக்கும் முள்ளால் நிரப்பி,
அந்த முள்ளையே காரணகாரியமாக வைத்து இடம்விட்டு
இடம்மாறி தன் விஷமுள் களைந்து வேறூன்றி மீண்டும்
ஓராயிரம் முள்ளுடன் தன் கிளை பரப்பும் இந்த
நெருஞ்சி முள்ளுக்கும் நேசகுமாருக்கும் ஏதேனும்
வித்தியாசம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
நாமக்கல் சிபிக்கு தெரிந்த புரிந்த இந்த "மார்க்க ரீதியான
தக்க காரணம்",
அதிகம் படித்த மேதாவியான இந்த
நெருஞ்சிக்குத் தெரியாமல் போனது அறிவு குறைச்சலால்
அல்ல. ஆணவமும் அது சார்ந்த கயமைத்தனமும் தான்.
ஆறு இல்லை ஏழு தமிழ் குர்ஆனை தன்னிடம்
வைத்துக் கொண்டு அது அத்தனையையும் குற்றம்
கண்டுபிடிப்பதற்காகவே நோட்டமிடும் இவருக்கு
பதிலளிக்க நான் இந்த பதிவை எழுதவில்லை. அது
எனது வேலையும் அல்ல. இந்த விஷமுள் தன்
கிளைபரப்பி நல்ல சில செடிகளையும், நாற்றாங்காலையும்
நாசம் பண்ணாமல் இருப்பதற்காக எச்சரிக்கை
வலைப்பதிவில் அதை எடுத்து எழுதியவன் என்ற
முறையில் விளக்கம் தருவது என்மீது கடமையாகின்றது.

மேலும் இந்த எச்சரிக்கை தளத்தை தமிழ்மணத்திலோ
அல்லது தேன்கூட்டிலோ நான் பதிவு செய்யவில்லை.
காரணம், அதில் எச்சரிக்கை செய்யப்படும் விஷயங்கள்
ஈமான் (நம்பிக்கை) தலைக்கேறிய உண்மை
முஸ்லிம்களுக்கு மட்டுமே என்பதால் தான். ஆனால்
இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் இழிந்துரைப்பதையே
தன்னுடைய வலைப்பதிவின் நோக்கமாக கொண்டவர்
நம்பிக்கை கொண்டவர்களுக்கு சொல்லப்பட்டதையும்
தன்னுடைய கோணல்பார்வையாலேயே அலசுகிறார்.
தான் ஏற்றுக்கொண்ட மார்க்கக் கொள்கைக்கு
உட்பட்டவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்படும் ஒரு
செய்தியில் பெண்ணுரிமையை திணிப்பதும், கணவன்
மனைவி உடல்சார்ந்த பிரச்சினையில் பெண்ணுரிமைப்
பேசுவதும் அறிவுஜீவிகளெனெ பீற்றிக் கொள்வோருக்கு
ஆகுமானதோ?

பெண்ணுரிமைக்கு எந்த வகையில் முரண்படுகிறது
எச்சரிக்கை தளத்தின் பதிவு என்பதை மீண்டும் ஒரு
முறை பார்வையிடுவோம்.

//"ஒரு பெண் தன் கணவன் படுக்கைக்கு அழைக்கும்
போது மார்க்க ரீதியான தக்ககாரணம் இல்லாமல் வராமலிருப்பது ஹராமாகும். 'ஒருவர் தன் மனைவியைபடுக்கைக்கு அழைக்கும் போது அவள் வர மறுத்தால் அவள் மீது அவன் கோபம்கொண்ட நிலையில் அந்த இரவை அவன் கழித்தால் விடியும் வரை வானவர்கள் அவளைசபிக்கின்றனர் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்' அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி), (புகாரி)

தனக்கும் தன் கணவனுக்குமிடையே பிரச்சனை ஏற்படும்
போது பெரும்பாலானபெண்கள் அவனைத் தண்டிப்பதாக எண்ணிக் கொண்டு
அவனுக்கு இல்லற சுகத்தைமறுத்து விடுகின்றனர். சில வேளை இதனால பெரும் தீங்குகள் ஏற்படும்.அவற்றில் ஒன்று கணவன் தவறான வழிக்குச் செல்வது. சிலவேளை விவகாரம்அவளுக்கு எதிராகத் திரும்பி, கணவன் அவளுக்கு மேல் இன்னொருத்தியைமணப்பதைப் பற்றி வினயமாகச் சிந்திக்கத் தலைப்படலாம்.

எனவே கணவன் படுக்கைக்கு அழைக்கும் போது நபி
(ஸல்) அவர்களின் கட்டளைக்குகீழ்படிந்து, விரைந்து அந்த அழைப்பை ஏற்றுக் கொள்வது மனைவியின்கடமையாகும். 'ஒரு மனிதன் தன் மனைவியை
படுக்கைக்கு அழைத்தால் அவள் (பயணம்புறப்படுவதற்காக) ஒட்டகத்தின் சேணத்தின் மேல் அமர்ந்திருந்தாலும்செல்லட்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்' அறிவிப்பவர்: ஸைத்பின் அர்க்கம். (பஸ்ஸார்)

அதே நேரத்தில் தன்னுடைய மனைவி நோயாளியாகவோ, கர்ப்பிணியாகவோ அல்லது வேறுஏதேனும் துன்பத்தில் இருந்தால் அது போன்ற சமயங்களில் அவளை இல்லறத்திற்குநிர்பந்திக்காதிருப்பது கணவன் மீது கடமையாகும். காரணம் அவ்விருவருக்கும் இடையே பிணக்கு ஏற்படாமல் கருத்தொற்றுமை நீடிக்க வேண்டும் என்பதற்காக."//

இஸ்லாத்தில் கல்யாண (நிக்காஹ்) ஒப்பந்த ஷரத்தில்
மிக முக்கியமானது, இல்லறசுகம், நல்ல சந்ததிகளை
உருவாக்குதல். இவை இரண்டிற்காகவே திருமணம்
கடமையாக்கப்பட்டுள்ளது. இதில் இல்லறசுகம் மனித
தேவையில் முதன்மையானது. மிக அவசியமானதும் கூட.
ஏனென்றால் இது மறுக்கப்படும் பொழுது மனிதன்
சிலவேளை புத்திபேதலித்து போகவும் கூடும். அதுவும்
கல்யாணம் ஆகி மனைவி அதை தக்க காரணமின்றி
மறுத்தால் அந்த நேரத்தில் வரும் கோபம் நேசகுமாருக்கு
தெரியாததல்ல. தாம்பத்தியத்தில் சுகம் அனுபவித்தல்
கணவன், மனைவி இருசாராருக்கும் பொதுவானதும் சில
உரிமைகளை உள்ளடக்கியதுமாகும். இதில்
பெண்ணுரிமை பேசினால் சிரிப்புதான் வருகிறது. இந்த
விஷயத்தில் மேலோட்டமாகப் பார்த்தால் பெண்ணுரிமை
பாதிக்கப்படுவதுபோல் தெரியலாம். ஆழ்ந்து
சிந்திப்பவர்களுக்குப் புரியும் அதனால் சமூகத்தில்
ஏற்படும் தீமைகள் என்னவென்று. சமூகம் என்பது அந்த
பெண்ணுரிமையையும் உள்ளடக்கியதுதான்.
பெண்ணுரிமைக்கு மட்டும் வக்காலத்து வாங்கும் நீசர்கள்
சமூக அக்கறையை சமாதிகட்டி விடுகிறார்கள்.
ஆசையாய் கணவன் மனைவியை நெருங்கும்போது
இதுதான் சந்தர்ப்பம் என்று அந்த சுகத்தை கணவனுக்கு
மறுத்து விடும்போது, கணவனின் அப்போதைய
நிலையை சற்று எண்ணிப் பாருங்கள். ஏதோ ஒருநாள்
இல்லை ஒருசில வேளை அல்லது உடல்கூறு
பிரச்சனைகளால் என்றால் கணவன் பொறுத்துபோக
வாய்ப்புண்டு. இதே தொடர்கதையாகி விட்டால்
பாதிக்கப்பட்டவன் வேறுவழி தேட அதிக வாய்ப்புண்டு
என்பதை அறிவுடையோர் அறிவர். என்ன வேறுவழி?
எச்சரிக்கை பதிவிலேயே விளக்கமாக சொல்லப்பட்ட
விஷயம்தான். அதில் 'கணவன் தவறான வழிக்கு
செல்வது' என்ற சொல் மிக முக்கியமானது. இங்கு தான்
சமூக அக்கறையற்ற, விபச்சார வழியைத் திறக்கக் கூடிய,
அதன் மூலம் கேடுகெட்ட அப்பன் பெயர் தெரியாத ஒரு
சந்ததி உருவாக அவளின் இந்த செயல் காரணமாகி
விடுகிறது. மேலே சொல்லப்பட்ட தீமைகள் பெரிதா?
இல்லை பெண்ணுரிமை பெரிதா? சிந்தித்து சீர்பெறுவோம்.

இன்னும் ஆணைப் பொறுத்தவரையில் பார்க்கும்
பார்வையிலேயே உடன் உணச்சிவசப்படக் கூடியவன்.
பெண் என்பவளோ அப்படி அல்ல. அவள் ஆணின்
தீண்டுதலிலேயே உணர்ச்சி அடைகிறாள். கணவன்
வெளிஉலக புழக்கத்தில் அதாவது அலுவலகத்தில்,
தெருவில், வியாபார ஸ்தலத்தில் இதுபோன்று இன்னும்
பல வகைகளில் இன்று கொடிகட்டிப் பறக்கும் கவர்ச்சி
என்ற காம சூழலில் தன் பார்வையை பேணிக் கொண்டு
உணர்ச்சிகளுக்கு வடிகால் தேடி தன் மனைவியிடம்
வரும் நல்ல கணவனுக்கு அந்த சுகம் மறுக்கப்படுவது
பெண்ணுரிமையா?

என்னுடைய அனைத்து வலைதளங்களிலும்
பின்னூட்டம் முற்றிலுமாக மறுக்கப்படுகிறது. காரணம்
என்னவெனில், அனானிஸ் என்ற போர்வையில் வந்து
முகம் தெரியாமல் முகாரி பாடும் நெஞ்சுரமற்றவர்கள்
என்னைப் பொறுத்தவரையில் கோழைகள் என்பதாலும்,
(சொல்வதை தெளிவாய் சொல் உன்னுடைய உண்மை
முகத்துடனும் உன் தாய் தந்தையர் வைத்த அழகிய
பெயருடனும்
) இன்னும் பதிவுக்கு இடப்படும்
பின்னூட்டங்கள் படிப்பவர்களின் பார்வை படுவது
குறைவு. எவ்வாறெனில் பதிவை படித்து விட்டு மீண்டும்
மீண்டும் அதே வலைதளத்திற்கு பின்னூட்டத்தை படிக்க
வருவோர் மிகவும் குறைவு. இதனால் சொல்லப்படும்
செய்தி அதிகமானோரைப் பொய்ச் சேர்வதில்லை
என்பதாலும் பின்னூட்டத்தைத் தவிர்த்திருக்கிறேன்.
பின்னூட்டமிட நினைக்கும் வலைப்பதிவர்கள்
தங்களுடைய தளத்திலேயே அதை பதிவாக போட்டு
சொல்ல வருவதை தெளிவாக சொல்வது நலம். தவிர்த்து
வெறுமனே படிப்பவர்கள் ஏதேனும் சொல்ல நினைத்தால்
என்னுடைய மின்னஞ்சல் அனைத்து வலைபதிவுகளிலும்
திறந்தே வைக்கப்பட்டிருக்கிறது. அதை பயன்படுத்தி
எனக்கு மின்னஞ்சல் செய்யவும். தங்களுடைய
மின்னஞ்சல் செய்தி நான் அவசியம் என்று கருதினால் என்னுடைய வலையில் சேர்க்கப்படும்.

என்றும் அன்புடன்
Jafar (safamarva) Kuwait

 
#b-navbar { height: 0px; visibility: hidden; display: none; }