Thursday, May 24, 2007

ஈமானின் நிலைகள்-மறுமையை நம்புதல்

மறுமை நாளின் அடையாளங்கள்


உலகம் அழிவதற்கு மிக நெருக்கத்தில் ஏற்படும் பத்து அடையாளங்களை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வானத்திலிருந்து வெளிப்படும் புகை மண்டலம்தஜ்ஜால் வருகை

மனிதனுடன் பேசும் பிராணி வருகை

சூரியன் மேற்கிலிருந்து உதித்தல்

ஈஸா(அலை) வானத்திலிருந்து இறங்குதல்

யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் வருகை

கிழக்கே ஒரு பூகம்பம்

மேற்கே ஒரு பூகம்பம்

அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்

எமன்; நாட்டிலிருந்து புறப்படும் தீப்பிழம்பு

இந்து பத்து அடையாளங்களும் உலகம் அழியும் மிக நெருக்கமான கட்டத்தில் ஏற்படுபவை.
ஹதீஸ்

நல்லவர்களில் முதன்மையானவர்கள் முதலாவதாகவும் அதற்கு அடுத்தவர்கள் அடுத்ததாகவும் (உயிர்) கைப்பற்றப்படுவர் (இவ்வாறு நன்மக்கள் மறைந்தபின் இப்பூமியில்) மட்டமான பேரீத்தம் பழத்தையும், வாற்கோதுமையையும் போன்ற தரம் தாழ்ந்தவர்களே எஞ்சி இருப்பர். அவர்களை அல்லாஹ் சற்றும் பொருட்படுத்த மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, அஹ்மத், தாரமீ: மிர்தாஸ் (ரலி))

நிச்சயமாக அல்லாஹ் கல்வியை அடியார்களிடமிருந்து ஓரோடியாகப் பறித்துவிட மாட்டான் ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலம் அவன் கல்வியைக் கைப்பற்றுவான் கடைசியாக ஒரு அறிஞர் கூட மீதமில்லாமல் ஆகிவிடும். மக்கள் அறிவீனர்களைத் தமது தலைவர்களாக்கி கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத்தீப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழிகெட்டு(ப்பிறரையும்) வழிகெடுப்பார்கள், என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா, அஹ்மத், தாரமி: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி))

ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! மறுமை எப்போது நிகழும்? எனக் கேட்டார். அதற்கு நபியவர்கள் 'அமானிதம் பாழடிக்கப்பட்டால் மறுமையை எதிர்பார்ப்பீராக! என்றார்கள், மீண்டும் அவர் அது எப்படி பாழடிக்கப்படும் என வினவ நபியவர்கள், தகுதியற்றவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்கப்படும் போது (அது பாழடிக்கப்படுகிறது)' என்று பதிலுரைத்தார்கள். (புகாரி: அபூஹுரைரா (ரலி))

கல்வி குறைந்து விடுவதும், அறியாமை அதிகரிப்பதும், விபச்சாரம் பெருகுவதும், மது அருந்தும் பழக்கம் அதிகமாவதும், 50 பெண்களை ஒரு ஆண் நிர்வாகிக்கும் அளவுக்கு ஆண்கள் குறைந்து பெண்கள் அதிகரிப்பதும் மறுமையின் அடையாளங்களில் உள்ளதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்: அனஸ் (ரலி))

(உங்களில்) ஹர்ஜ் அதிகமாகும் வரை மறுமை நிகழாது என நபி(ஸல்) கூறியபோது (ஹர்ஜ்) என்றால் என்ன? என நபித்தோழர்கள் வினவினார்கள். அதற்கு நபி ஸல்) அவர்கள் அதுதான் கொலை என்று இரண்டு முறை கூறினார்கள். (முஸ்லிம்: அபூஹுரைரா(ரலி))

நில நடுக்கம் அதிகரிக்கும், நேரங்கள் சுருங்கும், குழப்பங்கள் வெளிப்படும், கொலை பெருகும் இன்னும் சொல்வதானால் உங்களிடம் பொருட்கள் அதிகரித்து (அதையாரும் தீண்டாமல்) கொட்டிக் கிடக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்: அபூஹுரைரா (ரலி))

காலம் சுருங்கும் வரை அந்த (மறுமை) நாள் ஏற்படாது (இன்றைய) ஒரு வருடம் (அன்று) ஒரு வாரம் போல் ஆகும். ஒரு நாள் அன்று ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒருமணி நேரம் ஒர விநாடி போல் ஆகும். (திர்மிதி: ).

தஜ்ஜால் வெளிப்படுவான், மேற்கிலிருந்து சூரியன் உதிக்கும், புகை மூட்டம் ஏற்படும், யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டம் வெளிப்படும். ஈஸா (அலை) இறங்கி வருவார்கள். மேற்கில் ஒரு நிலச்சரிவு, கிழக்கில் ஒரு நிலச்சரிவு, அரபு தீபகற்பத்தில் ஒரு நிலச்சரிவு ஏற்படும் கடைசியாக. எமனிலிருந்து ஒரு தீப்பிழம்பு புறப்படும் மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்க்கும், பூமியிலிருந்த பேசும் பிராணி வெளிப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்: அபூஹுரைரா (ரலி)

சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது, தஜ்ஜால், அதிசயப்பிராணி ஆகிய மூன்று அடையாளங்கள் தோன்றிவிடுமானால் அவற்றிற்க்கு முன்பே ஈமான் கொண்டிருந்தால் தவிர ஈமான் பயனளளிக்காது

இம்மைக்கும் மறுமைக்கும் இடைப்பட்ட பர்ஸக் வாழ்வு!

(நிராகரித்துக் கொண்டிருக்கும்) அவர்களில் எவனுக்கேனும் மரணம் வந்து விட்டாலோ (அவன் தன் இறைவனை நோக்கி) என் இறைவனே! என்னை (உலகுக்கு)த் திருப்பி அனுப்பி விடு. நான் விட்டு வந்து அ(ந்த உலகத்)தில் (இனிமேல்) நற்காரியங்களையே செய்து கொண்டிருப்பேன் என்று கூறுவான். (எனினும் அது நடக்கக் கூடிய காரியம்.) அன்று (இத்தகைய சந்தர்ப்பத்தில்) அவன் கூறக்கூடியது வெறும் வார்த்தையே (அன்றி வேறில்லை) அவர்களுக்கு முன் அதில் (உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாள் வரையில் ஒரு பர்ஸக் உண்டு. (23:99,100)

ஒரு அடியான் கப்ரினுள் வைக்கப்பட்ட பின் அவனுடைய தோழர்கள் திரும்பி வருகின்ற போது அவர்களுடைய பாதணிகளின் சப்தத்தைக் கூட அவன் செவியுறுவான். அப்போது அவனிடம் இரண்ட மலக்குகள் வந்து (பல கேள்விகள் கேட்பார்கள். அதன் தொடரில் நபி (ஸல்) அவர்களைக் குறித்து) இந்த மனிதரைப் பற்றி நீ என்ன சொல்லுகிறாய்? என்று கேட்பார்கள். ஒரு மூமினைப் பொறுத்த வரையில் அக்கேள்விக்கு 'அவர் அல்லாஹ்வுடைய அடியாரும் அவனுடைய தூதருமாவார்கள். என நான் சாட்சி கூறுகிறேன்' என்று கூறுவான். அப்பொழுது அவனை நோக்கி 'நரகில் உனக்குத் தரப்படவிருந்த இடத்தைப்பார் அவ்விடத்துக்குப் பகரமாக உனக்கு சுவர்க்கத்தில் ஓரிடம் தரப்படுகிறது' என்று கூறப்படும். அப்பொழுது (சுவர்க்கம், நரகம் ஆகிய) அவ்விரண்டையும் அவன் காண்பான்.முனாபிக், காபிர் இருவரையும் நோக்கி (நபி (ஸல்) அவர்களைக் குறித்து இந்த மனிதரைப் பற்றி நீ என்ன சொல்லுகிறாய் என் கேட்கப்படும். 'அவரைப் பற்றி மக்கள் ஏதேதோ சொல்லுவதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன் (அது என்னவென்று இப்பொழுது) எனக்குத் தெரியாது, நான் அது பற்றி அறியவுமில்லை' என்று கூறுவான்.

அப்பொழுது அவன் இரும்புச் சம்மட்டியால் அடிக்கப்படுவான். ஒவ்வொரு அடியின் போதும் அவன் எழுப்புகின்ற ஓசையை மனிதனையும், ஜின்களையும் தவிர (பூமியிலுள்ள) எல்லா உயிரினனங்களும், செவிமடுக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்: அனஸ் (ரலி)

கப்ருடைய வாழ்கை

'உங்களில் ஒருவர் மரணித்து அடக்கம் செய்யப்பட்டால் அவரிடம் கரு நிறமான நீல நிறக் கண்களுடைய இரண்டு மலக்குகள் வருவார்கள். அவர்கள் முன்கர் என்றும் நகீர் என்றும் சொல்லப்படுவார்கள்' அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் குறித்து அவனிடத்தில் 'இந்த மனிதரைப் பற்றி நீ என்ன சொல்கிறாய்' என்று கேட்பார்கள். அவன் (மூமினாக இருந்தால்) 'அவர்கள் அல்லாஹ்வுடைய அடியாரும் அவனுடைய தூதருமாவார்கள்' என்று கூறுவான். அப்பொழுது அந்த மலக்குள் அவனை நோக்கி நீ இவ்வாறு கூறுவாய் என்பதை ஏற்கெனவே நாம் அறிந்திருந்தோம் என்று கூறுவார்கள். அதனைத் தொடர்ந்து அவனுடைய கப்ரு எழுபது ழுழங்கள் விசாலமாக்கப்படும். பின்னர் அந்த கப்ரு ஒலியேற்றப்பட்டு பிரகாசமாக்கப்படும்.அவனை நோக்கி 'நீ உறங்குவாயாக!' என்று கூறுவார்கள். அவனோ அவர்களை நோக்கி என்னுடைய குடும்பத்திடம் நான் சென்று (எனக்குக் கிடைத்துள்ள இந்நற் பாக்கியத்தை) அறிவித்து விட்டு வர என்னை விட்டு விடுங்கள் என்ற கூறுவான். அப்பொழுது அந்த மலக்குகள் 'மிக விருப்பத்துக்குரிய ஒருவரேயன்றி வேறெவரும் எழுப்பாதளவுள்ள மணமகனின் உறக்கமாக நீ உறங்குவாயாக!' என்று கூறுவார்கள். அன்றுமுதல் மறுமை நாள் வரை அவன் உறங்கிக் கொண்டே இருப்பான். முனாபிக் ஒருவனிடம் கேள்வி கேட்கும் போது, 'மக்கள் ஏதேதோ சொல்ல நான் கேட்டிருக்கிறேன். ஆனால் (இப்பொழுது எதுவும்) எனக்குத் தெரியாது' என்று கூறுவான். அபபொழுது அந்த மலக்குகள் அவனை நோக்கி 'நீ இவ்வாறே பதிலளிப்பாய் என்பதை ஏற்கனவே நாம் அறிந்து வைத்திருந்தோம்' என்று கூறுவார்கள். அதனைத் தொடர்ந்து அவனை நெருக்குமாறு பூமிக்கு உத்தரவிடப்படும். அவனுடைய (வலது இடது) விலா எலும்புகள் ஒன்றோடொன்று பின்னிக்கொள்ளுமளவு அவனை நெருக்கும். அவனை அந்த இடத்திலிருந்து அல்லாஹ் எழுப்புகின்ற நாள்வரை அவன் வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி: அபூஹுரைரா (ரலி))

கப்ரு ஒரு நபித்தோழரைக் கூட நெருக்கியது

கப்ரு என்பது எந்த ஒரு மனிதனையும் இலகுவாக விட்டுவிடாது. அல்லாஹ்வுடைய உத்தரவுப்படி வேதனைகளை அது அளிக்காமல் விட்டு விடாது. கப்ரில் ஒருவனுக்கு மீட்சி கிடைத்து விட்டால் அவனுக்கு மறுமையில் மீட்சி கிடைத்தது போன்றதாகும். நபித் தோழர்களில் நபியவர்களுக்கு மிக விருப்பத்துக்குரிய ஒரு தோழரான ஸஃது (ரலி) அவர்களின் ஸக்ராத்துடைய நிலை நமக்குப் படிப்பினையூட்டக் கூடியதாய் அமைந்துள்ளது.

ஸஃது (ரலி) அவர்கள் அகழ்யுத்தத்தின் போது கடுமையாகக் காயமுற்று நோயுற்றிருந்தார்கள். அவருடைய வீடு சற்று தூரத்திலிருந்ததால் அடிக்கடி அவரை நோய் விசாரிக்கச் செல்ல நபி அவர்களுக்கு சிரமமாயிருந்தது அடிக்கடி சென்று அவரைப் பார்ப்பதற்காக, அவருக்கென்று மஸ்ஜிதுந் நபவிக்கு அருகில் வீடொன்று அமைத்துக் கொடுக்குமாறு நபியவர்கள் தமது தோழர்களைப் பணித்தார்கள். அவ்விதம் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. அதன் பின்னால் நபியவர்கள் அடிக்கடி அவரைப் பார்த்து வந்தார்கள். ஒரு நாள் இரவு நடு நிசியில் ஜிப்ராயீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து 'வானத்திலும் பூமியிலும் உள்ளவர்களைக் கவலையடையச் செய்யக் கூடியதாக ஒருவர் மரணித்து விட்டார். அதனையிட்டு அல்லாஹ்வுடைய அர்ஷ்க்கூட நடுங்குகிறது' என்று சொல்லிவிட்டுச் சென்றார். உடனே நபி (ஸல்) அவர்கள் ஸஃது (ரலி) அவர்களிடம் சென்று பார்த்த போது அவர் இறந்திருக்கக் கண்டார்கள். மறுநாள் அந்த ஜனாஸா அடக்கம் செய்யப்படுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டு, கப்ரினுள் வைக்கப்படுவதைப் பார்த்து கொண்டிருந்த நபியவர்கள் திடீரென 'ஸுப்ஹானல்லாஹ்' என்றார்கள். நபித்தோழர்களும் 'ஸுப்ஹானல்லாஹ்' என்றனர். சற்று நேத்தில் 'அல்லாஹுஅக்பர்' என்று நபியவர்கள் கூறினார்கள். நபித் தோழர்களும் அவ்விதமே கூறினார்கள். இவ்விருவார்தைகளாலும் ஆச்சிரியமடைந்த நபித் தோழர்கள் ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டு முடிந்ததும் 'யாரஸுலுல்லாஹ்' வழக்கத்துக்கு மாறாக இன்று கவலையுடன் 'ஸுப்ஹானல்லாஹ்' என்றும், மீண்டும் சந்தோஷத்துடன் 'அல்லாஹுஅக்பர்' என்று கூறினீர்கள் இதன் காரணம் என்ன? என்று கேட்டார்கள்.அப்பொழது நபிவர்கள் 'ஸஃது (ரலி) கப்ரினுள் வைக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, கப்ரு அவரை நெருக்குவதைக் கண்ணுற்றேன். அப்பொழுது கவலையுடன் ஸுப்ஹானல்லாஹ் என்றேன். அதனைத் தொடர்ந்து கப்ரு அவரை நெருங்குவதை விட்டு அவருக்க இடம் கொடுத்தது. அப்பொழுது அல்லாஹுஅக்பர்' என்றேன் என்று கூறிவிட்டு ஒவ்வொரு கப்ரும் ஒவ்வொரு மனிதனையும் நெருக்காமல் விட்டு விடாது அதிலிருந்து ஒருவர் மீட்சி பெற முடியுமென்றிருந்தால் ஸஃது மீட்சி பெற்றிருப்பார் என்று கூறினார்கள். (அஹமது, நஸயீ: ஜாபிர் (ரலி)

'நிச்சயமாக ஒவ்வொரு கப்ரும் நெருக்கக் கூடியதாய் இருக்கின்றது. அதிலிருந்து ஒருவன் மீட்சி பெறமுடியும் என்றிருந்தால் ஸஃது மீட்சி பெற்றிருப்பார்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹமத்: ஆயிஷா (ரலி)

நபியவர்களுடைய கனவில் தோன்றிய கோரக் காட்சிகள்

'கடந்த இரவு கனவில் என்னிடம் இருவர் வந்து என்னை அழைத்துக் கொண்டு சிறிது தூரம் சென்றனர். அவர்கள் செல்லும் வழியில் நானும் நடந்தேன். அவ்வழியில் ஒருவன் சாய்ந்து படுத்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் ஒருவன் பெரிய கல்லொன்றை வைத்து கொண்டு நின்று கொண்டிருந்தான். அவன் அதனைப் படுத்துக் கொண்டிருந்தவனின் தலையில் போட்டான். அதனால் அவனுடைய தலை தகர்ந்து தூள்தூளானது. அந்த கல் உருண்டு கொண்டு போகவே அதனைத் தொடர்ந்து அம்மனிதன் சென்று அதைத்தூக்கி கொண்டு, தான் நின்ற இடத்துக்கே வந்து சேர்ந்தான். அப்போது சிதைதிருந்த தலை மீண்டும் பழைய நிலைக்கு வந்து நன்றாக இருந்தது. மீண்டும் மீண்டும் அவ்விதமே அந்த வேதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது' இதனைக் கண்ணுற்ற நான் என்னச் அழைத்துச் சென்றவர்களிடம் 'ஸுப்ஹானல்லாஹ்!' இவர்கள் யார்? என்ற ஆச்சர்யத்துடன் கேட்டேன் அவர்கள் என்னை நோக்கி நடந்து வருமாறு கூறினார்கள். நான் அவர்களுடன் நடந்தேன். அப்பொழுது மல்லாந்து படுத்துக் கொண்டிருந்த ஒருவனுக்கருகில் சென்றோம். அவனுக்கருகில் முன் பக்கம் வளைந்த கம்பியைப் போட்டுப் பிடரி வரை கிழித்தார். பின்மூக்குத் துவாரத்தில் கம்பியைப் போட்டுப் பிடரிவரைகிழித்தார். பின்னர் ஒரு கண்ணில் அதனைப் போட்டுப் பிடரிவரை கிழித்தார். அதனைத் தொடர்ந்து அவனுடைய முகத்தின் மறுபக்கத்தையும் அவ்வாறே கிழித்தார். இப்பக்கத்தைக் கிழித்து முடிய அப்பக்கம் மீண்டும் பழையபடி நல்லநிலையை அடைந்திருந்தது இவ்விதமே தொடர்ந்து அந்த வேதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது நான் 'ஸுப்ஹானல்லாஹ்' இவர்கள் யார்? என்று கேட்டேன். அதற்கவர்கள் தொடர்ந்து நடக்குமாறு எனக்குக் கூறினார். நாங்கள் நடந்தோம்.அப்பொழுது அடுப்பு போன்ற ஓரிடத்துக்குச் சென்றோம். அதன் தோற்றம் (கிணறு போன்று) ஆழமான ஒரு பொந்தாக இருந்தது. அதன் மேற்பாகம் நெருக்கமானதாகவும் கீழ்பாகம் அகண்டதாகவும் இருந்தது. அதனுள்ளிருந்து பயங்கர சத்தம் வெளியாகிக் கொண்டிருந்துது. அதனுள்ளளே எட்டிப்பார்தோம். ஆடையெதுமின்றி ஆண்களும், பெண்களும் நிர்வாணமாக இருந்தனர். அதனுள்ளிருந்து நெருப்பு சுவாலை விட்டு எரியும் போது, உள்ளிருப்பவர்கள் (நீரில் மிதப்பது போன்று) மிதந்து வருகின்றனர். அந்தப் பொந்திலிருந்து அவர்கள் வெளியேறிவிடக் கூடியளவு மேல் மட்டத்துக்கு வருகின்ற போது நெருப்பு அணைந்து, மீண்டும் அடித்தளத்துக்கே சென்று விடுகின்றனர்.

இந்த வேதனையும் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டே இருந்தது, அதனைக் கண்ணுற்றதும் அவர்கள் யார்? என்று கேட்டேன். அப்பொழுதும் அவர்கள் என்னை நடக்குமாறு கூறினார்கள். பின்னர் இரத்த நிறமான நதியொன்றுக்கருகில் சென்றோம். அந்த நதியில் ஒருவன் நீந்திக் கொண்டிருந்தான். மற்றொருவர் நதி ஓரத்தில் நின்று கொண்டிருந்தார். அவருடைய காலுக்கருகில் கற்கள் நிறைந்திருந்தன. நீந்திக் கொண்டிருந்தவன் கரைவந்து சேருகின்ற போது நின்று கொண்டிருந்தவர். ஒரு கல்லை அவனுடைய வாயினுள் போட்டுவிடுகிறார். அவன் கல்லை விழுங்கிக்கொண்டு மீண்டும் நீந்திச் செல்கிறான். மீண்டும் கரைக்கு வருகிறான். இந்த வேதனையும் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டே இருந்தது.

நான் கண்ட காட்சிகளுக்கு, என்னுடன் வந்த இருவரிடமும் இறுதியில் விளக்கம் கேட்டபோது ஒன்றின்பின் ஒன்றாக விளக்கமளித்தார்கள்.

கல்லினால் தலை தகர்க்கப்பட்டவன். அல்குர்ஆனைப் படித்தான். ஆனால் அதன்படி அவனது வாழ்வை அமைத்துக்கொள்ளவில்லை. பர்ளான தொழுகையைத் தொழாமல் உறங்கிவிட்டான்.

வலமும் இடமுமாக முகம் கிழிக்கப்பட்டவன் காலையில் வீட்டைவிட்டுப் புறப்பட்டுச் சென்றால் (தனது வயிற்றுப் பிழைப்புக்காக) பொய் சொல்லுவதையே வழக்கமாக்கிக் கொண்டான்.

பொந்தினுள் கண்ட நிர்வாணிகளான ஆண்களும், பெண்களும் விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள்.

இரத்த நிறமான நதியொன்றில் நீந்திக் கொண்டு கற்களை விழுங்கிக் கொண்டிருந்தவன் வட்டி உண்டவன்.

நபி (ஸல்) அவர்கள் தமது கனவை மேற்கண்டவாறு சொன்னார்கள். பர்ஸகுடைய உலகில் நடைபெறும் இவ்வாறான வேதனைகள் மறுமை நாள் வரை நடைபெறும் என்றும் கூறினார்கள். (புகாரி: ஸமுரா இப்னு ஜீன்துப் (ரலி))

கப்ரிலுள்ள பாவிகளுக்கு காலையும், மாலையும் நரகம் காட்டப்படுகிறது.

கப்ருடைய வேதனையின் போது பாவிகளுக்குக் காலையும், மாலையும் நரகம் காட்டப்படும் என்பதை பிர்அவ்னுடைய கூட்டத்தை ஆதாரமாக் காட்டி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

பிர்அவ்னுடைய ஜனங்களைத் தீய வேதனை சூழ்ந்து கொண்டது காலையிலும் மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டு போகப்படுவார்கள். மறுமை நாளிலோ 'பிர்அவ்னுடைய ஜனங்களைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள் (என்று கூறப்படும்)' (40: 45-46)

சூரிய வெப்பம் கடுமையாகிக் கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் நபியவர்கள் வீட்டிலிருந்து வெளியேறி வந்தார்கள். அப்பொழுது ஒரு சப்தத்தை அவர்கள் செவி தாழ்த்திவிட்டு, யூதர்கள் (சிலர்) தமது கப்ருகளின் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிக்கிறார்கள் (அதுதான் இந்த சப்தம்) என்று கூறினார்கள். (புகாரி: அய்யூப் (ரலி)

ஒரு யூதப் பெண் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்தபோது கப்ருடைய வேதனைபற்றிக் கூறிவிட்டு 'அல்லாஹ் உம்மைக் கப்ருடைய வேதனையிலிருந்து பாதுகாப்பானாக!' என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) நபியவர்களிடம் கப்ருடைய வேதனைப்பற்றி வினவினார்கள். அதற்கு நபியவர்கள் 'ஆம் கப்ருடைய வேதனை உண்டு' என்று பதிலளித்தார்கள்.'அதன் பின்னர் நபியவர்கள் எந்த ஒரு தொழுகை தொழுத போதிலும் கப்ருடைய வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தோடாமலிருக்க நான் கண்டதில்லை' என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (புகாரி: ஆயிஷா (ரலி))

பாதுகாப்பு கப்ர் வேதனை

நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகையின் போதும் நான்கு வகையான சோதனைகளிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடமலிருந்ததில்லை அதில் முதலாவதாக கப்ருடைய வேதனையிலிருந்தே பாதுகாவல் தேடினார்கள். அந்த துஆ பின்வருமாறு.

'அல்லாஹ்வே! கப்ருடைய வேதனை, நரக வேதனை வாழ்கையில் மரணத்தின் போதும் ஏற்படக்கூடிய சோதனை, தஜ்ஜாலுடைய வருகையால் ஏற்படக்கூடிய சோதைனை ஆகியவற்றிலிருந்து' உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். (புகாரி: அபூஹுரைரா (ரலி)

கப்ர்

கப்ரு என்பது மறுமையின் தங்குமிடங்களில் முதலாவது இடமாகும். அதிலிருந்து ஒருவன் மீட்சி பெறுவானென்றால் அதற்குப் பின்னாலுள்ள அனைத்தும் இலகுவாகிவிடும். அதிலிருந்து அவன் மீட்சிபெறவில்லையென்றால் அதற்குப் பின்னாலுள்ள அனைத்தும் அவனுக்குக் கடினமாகி விடும். என்றும் கப்ருடைய காட்சிகளை விடமிகமிக மோசமான எந்த ஒரு காட்சியையும் நான் கண்டதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன் என்றார்கள். (திர்மிதி, இப்னுமாஜா: உத்மான் (ரலி)

'எவன் தன்னைத் தானே கேள்வி கேட்டு (விசாரனை செய்து) கொண்டு மரணத்துக்குப் பின்னாலுள்ள தனது வாழ்வுக்காக இவ்வுலக வாழ்வை அமைத்துக் கொள்கிறானோ, அவனே புத்திசாலியாவான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா : ஷத்தாத் இப்னு அவ்ஸ் (ரலி)

இந்த நபி மொழியை அடிப்படையாகக் கொண்டு உமர் (ரலி)அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். 'நீங்கள் (கப்ரிலும் மறுமையிலும்) விசாரணை செய்பப்படுவதற்கு முன்னால் உங்களை நீங்களே விசாரணை செய்து கொள்ளுங்கள். ஒரு பொழுது விசாரனைக்காக நீங்கள் நிறுத்தப் படுவதற்கு முன்னால் உங்களை நீங்கள் தயார் படுத்திக் கொள்ளுங்கள். அவன் இம்மையிலும் தன்னைத்தானே கேள்வி கேட்டுக் கொள்கிறானோ, அவனுக்கே மறுமை விசாரனை இலகுவாக அமையும்' (திர்மிதி: உமர் (ரலி)

மறுமையை நம்புவது

மறுமை என்றால் என்ன?

இவ்வுலகவாழ்க்கை மிகக்குறுகிய காலத்திலேயே முடிவடைந்துவிடும். பிறப்பு, இளமை, வாலிபம், முதுமை மரணம் இவ்வளவுதான் வாழ்க்கை. இதில் பலர் இந்த பருவங்களை அனைத்தையும் கடந்துதான் மரணிப்பார்கள் என்று கூறமுடியாது. இப்படி நிலையற்ற வாழ்க்கைதான் இந்த உலக வாழ்க்கை. இந்த வாழ்க்கையில் மனிதன் எப்படி வாழ்கிறான், அவனைப்படைத்த இறைவன் அவனுக்கு கொடுத்தவாழ்க்கை முறையைப் பேணி கட்டுப்பட்டுள்ள குறுகிய வாழ்க்கைதான் இம்மை வாழ்க்கை (67:2, 11:7) இந்த சோதனைக்கான முடிவுகள் உலகமக்கள் அனைவரையும் (முதல் மனிதர் முதல் உலகம் முடியும் வரை வரும் மக்கள் உலகம் முமுவதுமாக அழிந்த பிறகு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பி அவர்களின் செயல்களுக்குத் தக்கவாறு (வெற்றித் தோல்வி) முடிவுகள் அமையும். அம்முடிவு நிரந்தரமானதொன்று, மரணமற்ற மறுமை வாழ்வு.

மறுபிறவி நம்பிக்கை இஸ்லாத்தில் இல்லை. தான் செய்த செயல்களுக்குத் தக்கவாறு மறு பிறவிகள் எடுப்பதாகவும் மற்ற மதங்கள் கூறுவது அறிவியல் ரீதியாகவும், பகுத்தறிவு ரீதியாகவும் நிரூபிக்க, சரிகாண முடியாது. ஒரே வாழ்வு இம்மை மட்டும்தான் என்பதையும் ஏற்கமுடியாது.

மறுமை தேவை ஏன்

வாழ்நாள் முழுவதும் தவறான செயல்களைச் செய்பவன் தவறான வியாபாரம் செய்பவன் மக்களுக்கு தொல்லை தந்து விட்டு. சுகபோகமாக வாழ்ந்து மடிகிறான். அதற்குண்டான தண்டனை எப்படி? எப்போது? மறுமையில் தான்.

வாழ்க்கையை கட்டுப்பாடாகவும், முறையான வியாபாரம் மக்களுக்கு உதவி நேசத்தோடு வாழ்கிறான். அவன் இவ்வுலகவாழ்வில் கஷ்டமான வாழ்வு அவனுக்கு சுகபோகம் மறுமையில்தான்.

குற்றமற்றவன் தண்டனை அனுபவிக்கிறான். குற்றம் செய்தவன் தப்பித்துக் கொள்கிறான். சந்தர்ப்பம் சூழ்நிலை சாட்சியங்கள் அப்படி அமைந்து விடுகிறது. இதற்கு உண்மையான தீர்வு மறுமையில்தான்.

படுகொலைகள் பல செய்தவனுக்கும் ஒரே ஒரு கொலை செய்தவனுக்கும் மரணதண்டனை ஒருமுறை அதிக குற்றங்கள செய்தவன் அதற்குண்டான முழுமையான தண்டனையை அனுபவிக்க மறுமைதான். தனிமையில் பலகுற்றங்கள் செய்தவன் சாட்சியம் இல்லாதவன் தப்பித்துக் கொள்கிறான். தண்டனை மறுமையில்தான்.

பலசாலி ஒருவன் பலவீனனை தாக்கிவிட்டான் இவ்வுலகில் பழிதீர்க்க முடியவில்லை பழிதீர்ப்பது நீதி கிடைப்பது எப்போது மறுமையில்தான்.

இவ்வுலகில் குற்றங்கள் குறைய வேண்டும் மக்கள் சுபிட்சமாக வாழவேண்டும் ஒழுக்கங்களைப் பேண வேண்டும். நற்பண்புகளை கையாளவேண்டும். மனிதன் தான் பெற்றுள்ள பகுத்தறிவைப் பயன்படுத்தி மனிதனாக வாழவேண்டும் என்றால் மறுமை தேவை.

நாம் இவ்வுலகில் எவ்வளவு பெரிய ஆட்சி அதிகாரம் வல்லமை தன் தவற்றை மறைக்கும் திறமைப் பெற்றிருப்பினும் அண்ட சராசரங்களை அடக்கியாளும் சக்தி ஒன்று உள்ளது. அந்த சக்திக்கு பதில் சொல்ல வேண்டும். இம்மையில் இல்லையென்றால் மறுமையில் பதில் சொல்ல வேண்டும். என்ற பயம் இருந்தால்தான் மனிதன் மனிதனாக வாழ்வான். மீறுபவன் படிப்பவன் தண்டனைப் பொறுவான். கட்டுப்பட்டவன் நல்ல நிலைகளை அடைவான். அதற்குதான் மறுமை (10:4, 45:21,22)

உலக அழிவு (மறுமை) எப்படி ஏற்படும் 1) சூரியன் வெடித்து நாலாப்பக்கமும் சிதறும். அதன் நெருப்பு ஜுவாலைகளால் கிரகங்கள் பற்றி எரிந்து பூமியே பஷ்பமாகிவிடும். 2) சூரியன் தன் ஒளியிழந்து குளிர்ந்து போகும் இதனால் பூமி இருளடைந்து குளிரால் உறைந்து உதவாத தரிசு நிலமாகிவிடும். 3) ஒரு விண்மீன் சூரியன் மீது மோதி சேதப்படுத்தும் சாலையோரம் நின்ற அப்பாவி ஒருவன் விபத்தில் பலியாவது போன்ற நிலைதான் பூமிக்கும். 4) ஒரு வால் நட்சத்திரம் படுவேகமாக வந்து பூமிமீது பயங்கரமாக மோதித்தாக்கும். 5) புவிஈர்ப்பு சக்தியினால் சந்திரன் பூமிக்குமிக அருகில் ஈர்க்கப்படும். அதனால் பெரும் கடல் கொந்தளிப்புகள் ஏற்படுவதுடன். எரிமலைகள் வெடித்து பூமி அழிந்துவிடும். விஞ்ஞானம் கூறும் ஆய்வுகள்.

குர்ஆன் கூறும் உண்மைகள்

மறுமைநாளின் அதிர்ச்சி மகத்தானதாகும். பாலூட்டும் தாய், குழந்தையை மறப்பார், கர்ப்பமுடையவள் சுமையை (கர்ப்பத்தை) வைத்து (ஈன்று)விடுவாள். மனிதர்கள் மதி மயங்கி கிடப்பார்கள். (22:1,2)

அந்நாளில் நிகழவேண்டியது நிகழ்ந்துவிடும் வானமும் பிளந்து அது பலமற்றதாக ஆகிவிடும். (69:15,16)

வானம் உருக்கப்பட்ட செம்பை போல ஆகிவிடும் இன்னும் மலைகள் பஞ்சைப் போல் ஆகிவிடும். (70:8,9)

பூமியும் மலைகளும் ஆட்டம் கண்டு மலைகள் சிதறி மண் குவியல்களாகிவிடும். (73:14)

நட்சத்திரங்கள் அழிக்கப்பட்டுவிடும், வானம் பிளக்கப்படும், இன்னும் மலைகள் பறக்கடிக்கப்பட்டு விடும். (77:8,9,10)

சந்திரன் ஒளியிழந்துவிடும். சூரியனும், சந்திரனும் ஒன்றாக்கப்பட்டுவிடும். (75:8,9)

கடல்கள் தீ மூட்டப்படும்போது. (81:6)

நட்சத்திரங்கள் உதிர்ந்து விடும் போது. (82:2)

மறுமை சாத்தியமில்லை என்று (காஃபிர்கள்) கூறுகிறார்கள்.

இன்னும்; ''(இறந்து பட்டு) எலும்புகளாகவும், உக்கிப் போனவைகளாகவும் நாங்கள் ஆகிவிட்ட பிறகு, நிச்சயமாக புதிய படைப்பாக நாங்கள் எழுப்பப்படுகிறவர்களாக?'' என்றும் அவர்கள் கேட்கிறார்கள். (17:49)

மேலும், அவர்கள்; ''நாம் மரித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விட்டாலும், நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா?'' என்று கேட்டுக் கொண்டு இருந்தனர். (56:47)

மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; ''எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?'' என்று. (36:78)

உயிர்ப்பிக்க முடியுமா

''நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவுமாகி விட்டபின், (மீண்டும் நாம் உயிர்ப்பிக்கப்பட்டு) கூலி வழங்கப்பெறுவோமா?'' என்றும் கேட்டான்.) (37:53)

இறந்தவர்களை அல்லாஹ் (உயிர்ப்பித்து) எழுப்ப மாட்டான் என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது பிரமாணமாகச் சத்தியம் செய்கிறார்கள். அப்படியல்ல! (உயிர் கொடுத்து எழுப்புவதான அல்லாஹ்வின்) வாக்கு மிக்க உறுதியானதாகும்; எனினும் மக்களில் பெரும்பாலோர் இதை அறிந்து கொள்வதில்லை. (16:38)

உங்களில் யார் அமலில் (செய்கையில்) மேலானவர் என்பதைச் சோதிக்கும் பொருட்டு (இவற்றைப் படைத்தான்; இன்னும் நபியே! அவர்களிடம்) ''நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்'' என்று நீர் கூறினால், (அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள்) காஃபிர்கள், ''இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை என்று நிச்சயமாகக் கூறுவார்கள். (11:7)

''மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?'' (79:11)

(மரித்த பின்னர்) அவர்கள் எழுப்பப்படவே மாட்டார்கள் என்று நிராரிப்பவர்கள் எண்ணிக் கொண்டனர்; ''அப்படியல்ல! என்னுடைய இறைவன் மீது சத்தியமாக, நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்! பிறகு நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக அறிவிக்கப்படுவீர்கள் - மேலும் அது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதேயாகும்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக. (64:7)

ஒன்று திரட்டும் (மறுமை) நாளுக்காக அவன் உங்களை ஒன்று திரட்டும் நாள் அதுவே, (தீயோரை) நஷ்டப்படுத்தும் நாளாகும்.... (64:9)

மறுமை சாத்தியம்

அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வரும் என்று வினவுகிறார்கள்; நீர் கூறும்; ''அதன் அறிவு என் இறைவனிடத்தில் தான் இருக்கிறது அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்த இயலாது... (7:187)

(நபியே!) நீர் கூறும்; ''நீங்கள் கல்லாகவோ, இரும்பாகவோ ஆகுங்கள். (17:50)

''அல்லது மிகப் பெரிதென உங்கள் நெஞ்சங்களில் தோன்றும் வேறொரு படைப்பாய் ஆகுங்கள்;'' (எப்படியானாலும் நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்). ''எங்களை எவன் (மறுமுறையும் உயிர் கொடுத்து) மீட்டுவான்?'' என்று அவர்கள் கேட்பார்கள். ''உங்களை எவன் முதலில் படைத்தானோ, அவன் தான்!'' என்று (நபியே!) நீர் கூறும்; அப்போது அவர்கள் தங்களுடைய சிரசுகளை உம் பக்கம் சாய்த்து, (பரிகாசமாக) அது எப்போது (நிகழும்)? என்று கேட்பார்கள். ''அது வெகு சீக்கிரத்தில் ஏற்படலாம்'' என்று கூறுவீராக! (17:51)

உங்களை (இறுதியில்) அவன் அழைக்கும் நாளில், நீங்கள் அவன் புகழை ஓதியவர்களாக பதில் கூறுவீர்கள்; (மரணத்திற்குப் பின்) சொற்ப(கால)மே தங்கியிந்ததாக நீங்கள் நினைப்பீர்கள். (15:52)

அன்று; அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம். (75:4)

மறுமை நாளின் பெயர்கள்

யவ்முத்தீன் (1:4)

ஆஹிரா (2:85)

கியாமா (2:85)

தாருல் ஆஹிரா (2:94)

அஸ்ஸாசு (6:31)

யவ்முல் ஹஸரத் (19:39)

யவ்முல் பஅத் (39:56)

யவ்முல்ஃபஸ்ல் (37:21)

யவ்முத்தலாக் (40:15)

யவ்முல் ஹிஸாப் (40:27)

அல்வாகிஆ (56:1)

அல்ஹாக்கா (69:1-3)

சுவர்க்கம்

என்னுடைய நல்லடியார்களுக்கு எந்தக் கண்ணும் (இதுவரை) கண்டிராத, எந்தக்காதும் செவியுறாத எந்த மனிதனின் உள்ளத்திலும் தோன்றிடாதவை யெல்லாம் நான் தயாரித்து வைத்துள்ளேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. (3:133)

அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது. (32:17)

நோய், மரணம், முதுமை, பீடைகள் இல்லாத வாழ்வு

சுவர்க்கத்திற்குரியவர்கள் சுவர்க்கத்தின் உள்ளே புகுந்து விட்டால் நீங்கள் ஆரோக்கியத்தோடு வாழ்வதையே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது, எனவே நீங்கள் எப்போதும் இனி நோயுற மாட்டீர்கள். நீங்கள் நிரந்தரமாக ஜிவித்திருப்பதையே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டள்ளது. எனவே நீங்கள் எப்போதும் இனி மரணிக்கவே மாட்டீர்கள், நீங்கள் இளமையாகவே இருப்பீர்கள் என்பதை உங்களுக்கு ஏற்படுத்தப்பட்ள்ளது. எனவே நீங்கள் எப்போதும் இனி முதுமையை அடையமாட்டீர்கள். நீங்கள் பாக்கியங்கள் பெற்று சுகமாக வாழ்வதையே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் எப்போதும் இனி பீடை பிடித்தவர்களாக ஆகமாட்டிர்கள் என்று அழைப்பாளர் ஒருவர் அழைத்துக் கூறுவார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி: அபூஹுரைரா (ரலி))

சுவர்க்க வாயில்கள்

நிச்சயமாக சுவர்க்கத்திற்கு எட்டு வாயில்கள் உண்டு. எவர் தொழுகையாளியாக இருந்தாரோ அவர் தொழுகை வாயினிலிருந்து அழைக்கப்படுவார். எவர் நோன்பாளியாக இருந்தாரோ அவர் நோன்புடைய வாயினிலிருந்து அழைக்கப்படுவார். எவர் தர்மம் செய்தவராக இருந்தாரோ அவர் தர்மத்துடைய வாயினிலிருந்து அழைக்கப்படுவார். என்று கூறியதும் 'அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இந்த எட்டு வாயில்களிலிருந்தும் எவராவது அழைக்கப்படுவாரா?' என்று அபூபக்கர்(ரலி) கேட்டார்கள். ஆம், அவர்களில் நீரும் இருக்க ஆசிக்கின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், அஹ்மது, இப்னுமாஜா: ஸஹ்லுப்னு ஸஅத் (ரலி))

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்மோடு ஒப்பந்தம் செய்து வாழும் அந்நியன் ஒருவனை எவர் கொன்று விடுவாரோ அவர் சுவர்க்கவாடையை பெறமாட்டார். தங்கள் மேனிகளை மறைக்காமல் அறை குறை ஆடையில் நீர்வாணமாக உங்களை ஆட்டி அழைத்துச் செல்லும் பெண்கள் சுவர்க்க வாடையை பெறமாட்டார்கள்.

முதன் முதலாக சுவர்க்கத்தில் நுழைபவர்

நான் நபிமார்களை பின்பற்றுவோர்களை அதிகமாகக் கொண்டவன், சுவர்க்கவாசலை தட்டுவோரில் நானே முதன்மையானவன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் மறுமை நாளில் சுவர்க்கத்தின் வாயிலுக்கு வந்து அதை திறக்க தேடுவேன். அப்போது யார் என்று என்னிடம் கேட்கப்படும், 'முஹம்மது' என்று சொல்லுவேன். உமக்கு முன்னால் நான் திறக்கக் கூடாது என்று உம் விஷயத்தில் நான் ஏவப்பட்டு இருந்தேன். என்று (அதன் பாதுகாவலர்) கூறுவார்.

சுவர்க்கவாசிகளின் இதயங்கள்

தவிர (இவ்வுலகில் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த) குரோதத்தையும் அவர்களுடைய இதயங்களிலிருந்து நீக்கி விடுவோம்; அவர்களுக்கு அருகில் ஆறகள் ஓடிக்கொண்டிருக்கும்; இன்னும் அவர்கள் கூறுவார்கள்; ''இ(ந்த பாக்கியத்தைப் பெறுவ)தற்குரிய நேர்வழியை எங்களுக்குக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் உரியதாகும்; அல்லாஹ் எங்களுக்கு நேர் வழி காட்டியிராவிட்டால், ஒருக்காலும் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்டோம் - நிச்சயமாக எங்கள் இறைவனுடைய தூதர்கள் உண்மை (மார்க்கத்தை)யே (நம்மிடம்) கொண்டு வந்தார்கள்'' (இதற்கு பதிலாக, ''பூமியில்) நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே நீங்கள் இந்த சுவனபதியின் வாரிசுகளாக்கப்பட்டு இருக்கிறீர்கள்'' என்று அழைக்கப்படுவார்கள். (7:43)

மேலும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்; (எல்லோரும்) சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி அரியாசனங்களில் (ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள். (15:47)

சுவர்க்கம் புகும் முதல் கூட்டத்தின் நிலை

சுவர்க்கம் புகும் முதல் கூட்டத்தினர் பவுர்ணமி இரவில் உள்ள முழுநிலவு போன்று இருப்பார்கள். அவர்களுக்கு அடுத்தவர்கள் வானத்தில் ஒளிவீசிக் கொண்டிருக்கும் நட்சத்திரம் போன்று இருப்பார்கள். அதற்கு பின்னால் அங்கே பல படித்தரங்கள் உண்டு. மலம் கழிக்கமாட்டார்கள். சிறுநீர் கழிக்கமாட்டார்கள், முக்குச்சளி சிந்த மாட்டார்கள். எச்சில் துப்பமாட்டார்கள். அவர்களுக்கு சீப்பு தங்கத்தினால் ஆனதாகும். அவர்களின் வியர்வை கஸ்தூரி மணமாகும். அவாகளுடைய குணங்கள் (ஒரே) நிலையில் இருக்கும். அவர்களுடைய பிதா ஆதமுடைய உடல், உயரம் போன்று அறுபது முழத்தில் இருப்பார்கள். அவர்களுக்கிடையே கோபதாபங்களோ, குரோதங்களோ இருக்காது, காலை மாலை நேரங்களில் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்து கொண்டிருப்பார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதி: அபூஹுரைரா (ரலி))

சுவர்க்கவாசிகளின் வரவேற்பு வார்த்தை

அல்லாஹ் ஆதமை அவருடைய வடிவத்தில் படைத்தான். அறுபது முழம் நீளமாக அவருடைய உயரம் இருந்தது. அவரை படைத்த போது அமரர்களின் ஒரு கூட்டத்தினரிடம் போய் ஸலாம் சொல்வீராக! அவர்கள் உமக்கு எதனை பதிலாக சொல்கிறார்கள் என்று கேளும். அப்பதிலே உமக்கும் உம்முடைய சந்ததியினருக்கும் முகமன் வார்த்தையாகும் என்று அல்லாஹ் கூறினான். அவர்களிடம் சென்று அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறினார்கள். அவர்கள் அஸ்ஸலாமு அலைக்கும வரஹமத்துல்லாஹி என்று ரஹ்மத்துல்லாஹி என்பதை அதிகமாக சொன்னார்கள். சுவர்க்கம் புகும் ஒவ்வொருவரும் ஆதமுடைய வடிவத்தில் அறுபது அடி உயரத்தில் இருப்பார்கள். குறைந்து. அறுபது முழம் உயரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மனித படைப்புகள் குறைந்து (ஆறு அடி உயரத்திற்கு ஆகிவிட்டார்கள்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அங்கு அவர்கள் வீணானவற்றையும், பொய்ப்பித்தலையும் கேட்கமாட்டார்கள். (78:35)

அதில் அவர்கள்; ''(எங்கள்) அல்லாஹ்வே! நீ மகா பரிசுத்தமானவன்'' என்று கூறுவார்கள்; அதில் (தம் தோழர்களைச் சந்திக்கும் போது) அவர்களின் முகமன் ஸலாமுன் என்பதாகும். ''எல்லாப் புகழும் அகிலங்கள் அனைத்துக்கும் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே'' என்பது அவர்களது பிரார்த்தனையின் முடிவாகும் இருக்கும. (10:10)

சுவர்க்கவாசிகளுடைய பதவிகளின் வித்தியாசங்கள்

சுவர்க்கத்தில் நூறு படித்தரங்கள் உண்டு இரண்டு படித்தரங்களுக்கு இடையில் உள்ள வித்தியாசம் பூமிக்கும், வானத்திற்கும் இடையேயான வித்தியாசம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி: உபாத துப்னு ஸாமித் (ரலி))

சுவர்க்க வாசிகள் தங்களுக்கு மேலே உயர்பதவியிலுள்ள குரஃப் வாசிகள். அவர்களுக்கிடையே உள்ள பதவி வித்தியாசம் காரணமாக மிகமிக உயரத்தில் கீழ்திசையிலோ அல்லது மேல் திசையிலோ மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரத்தை நீங்கள் பார்ப்பது போன்று பார்ப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இந்த மாதிரியான உயர் பதவியுடைய இடம் நபிமார்களுக்கு உள்ள இடங்களாக இருக்குமோ, அவர்களைத் தவிர வேறு எவரும் அடைய முடியாதவையாக இருக்குமே என்று வினவினார்கள். இல்லை! என் ஆத்மா எவன் கையில் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக! எவர்கள் அல்லாஹ்வை விசுவாசித்து நபிமார்களை உண்மைப்படுத்தி வாழ்ந்தார்களோ அவர்களின் இடமாகும் என்றார்கள். (புகாரி, முஸ்லிம்;: அபூஸயீத் (ரலி))

சுவர்க்க வாசிகளுக்கிடையே, சந்திப்பு ஜியாரத் உண்டா? ஆம் மேல் மட்டத்தில் உள்ளவர்கள் கீழ்மட்டத்தில் இறங்கிவந்து முகமன் கூறி ஸலாம் கூறுவார்கள். கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் மேல் மட்டத்திற்கு செல்ல சக்தி பெறமாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் குறைவான அமல்கள் அவர்களை மேலே ஏற்றாது, தடுத்து விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

சுவர்க்கத்தில் கோட்டைகள்

சுவர்க்கத்தில் ஒரு கோட்டையைப் பார்த்தேன் இந்தக் கோட்டை யாருக்கென்று நான் கேட்டேன். குரைஷியரில் உள்ள ஒரு வாலிபருக்கு என்று கூறினார்கள். யார் அவர் என வினவியதும் உமர் என்றார்கள். நான் அதில் நுழைய நாடினேன். உமரே! உமது ரோஷத்தை நினைவு கூர்ந்து அதில் நான் நுழையவில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும், உமருடைய இரண்டு கண்களும் கண்ணீரால் நிரம்பிவிட்டன அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தங்கள் மீதா நான் ரோஷம் கொள்வேன் என்றார்கள் உமர் (ரலி) அவர்கள். முஸ்லிம்)

சுவர்க்கத்தின் மாளிகைகள் தங்கம் வெள்ளி கற்களால் கட்டப்டிட்டிருக்கும் முத்துக்களும் மகரந்தங்களும் அதனுடைய சிறுகற்களாககும். அதன் மனம் குங்குமப் பூவாகும் அதில் நுழைந்தவர் சுபிட்சமாக இருப்பார். பீடைபிடித்தவராக மாட்டார். நிரந்தரமாக இருப்பார். மரணிக்கவேமாட்டார். அவரின் ஆடைகள் மக்கிப்போகாது, அவரின் இளமை அழியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி: அபூஹுரைரா (ரலி)

பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தின் எவன் என்றென்றுமே தங்கியிருந்த, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா. (47:15)

மிகக் குறைந்த பதவியுடைய சுவர்க்கவாசி

நபி மூஸா (அலை) அவர்கள் மிகக் குறைந்த பதவியுடைய சுவர்க்கவாசியைப் பற்றி எனக்கு அறிவிப்பாயாக! என அல்லாஹ்விடம் கேட்டார்கள். அல்லாஹ் கூறினான்: சுவர்க்கவாசிகள் அனைவரும் சுவர்க்கத்தில் நுழைந்து முடிந்ததும் கொண்டுவரப்படும் ஒரு ஆள் அவர் 'சுவர்க்கத்தில் நுழைவாயாக' என்று கூறப்படும் அவர் இரட்சகா! மனிதர்கள் தங்களுககு்காண இடங்களில் தங்கிவிட்டார்களே அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டியவைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டார்களே! எப்படி நான் நுழைவது என்று கேட்பார்.'உனக்கு உலகத்தில் வாழ்ந்த அரசர்களில் ஒருவர் இருந்த வாழ்கை வசதி போன்று ஆக்கிக் கொடுத்தால் திருப்திபட்டுக் கொள்வாயா? என்று அல்லாஹ் கேட்பான். திருப்தி பட்டேன் என்று அவர் சொல்லுவார். உனக்கு அதுவும் அது போன்றதும் உண்டு என்று அல்லாஹ் கூறியவுடன் இரட்சகா! நான் பூரண திருப்தியை அடைந்து விட்டேன் என்று கூறுவார் (முஸ்லிம், திர்மிதி: முகீரா இப்னு ஹீஃபா (ரலி)

கடைசியாக சுவர்க்கம் பிரவேசிக்கும் சுவர்க்கவாசி

கடைசியில் சுவனம் புகுவர் ஒரு மனிதர் அவர் ஒரு தடவை நடப்பார் மற்றொரு தடவை (நரகில்) முகம்குப்பிற கீழேவிழுவார் நரகம் அவரை கரிக்கும். கடைசியாக அதைத் தாண்டி வந்ததும் நரகத்தின் பால் திரும்பிப் பார்த்து, உன்னிடமிருந்து என்னை காத்துக் கொண்ட அல்லாஹ் மிக உயர்ந்தவன் என்று அல்லாஹ் எனக்கு முன்னோர்கள் பின்னவர்கள் எவருக்கும் கொடுக்காத ஒன்றைக் கொடுத்தான் என்றும் (நரகத்தின் வேதனையிலிருந்து வெளியானதைப் பற்றி நினைத்து மகிழ்ச்சியில் இவ்வாறு) கூறுவார். ஒரு மரம் அவருக்கு உயர்த்திக் காட்டப்படும்;. இரட்சகா! இந்த மரத்தின்பால் என்னை நெருக்கமாக ஆக்கிவை. நான் அதன் நிழலில் இளைப்பாறிக் கொண்டும் அதன் நீரை குடித்துக் கொள்வேன். என்றும் கூறுவார். ஆதமின் மகன் இதைக் கொடுத்தால் அதுவல்லாத மற்றவைகளையும் கேட்கலாம் அல்லவா? என்று இறைவன் சொல்வான் இல்லை இரட்சகா நான் வேறு எதையும் கேட்கப் போவது இல்லை. என்று கூறுவான். அல்லாஹ்வும் அவன் சொல்படி அம்மரத்தின் பக்கம் அவரை நெருக்கி வைப்பான். அவன் மேலும் கேட்பான் என்பதை அல்லாஹ் அறிந்தே இருக்கிறான். அதன் பின்னர் வேறு ஒரு மரம் முன்னதைவிட அழகானதாக காட்டப்படும். அப்போது இரட்சகா! இதன் பால் என்னை நெருங்கச் செய் அதன் நீரைக்குடித்தும். அதன் நிழலில் இளைப்பாறியும் கொள்வேன். அதுவல்லாத வேறு எதனையும் நீ கேட்பதில்லை என்று முன்னர் என்னிடம் உடன்படிக்கை செய்யவில்லையா? என்று கேட்டு இப்போது இதன் பாலும் உன்னை நான் சேர்த்து வைத்தால் இதுவல்லாத மற்றொன்றையும் கேட்பாய் அல்லவா? என்று சொல்வான் ஆதமின் மகனே வேறு எதையும் நீ கேட்பதில்லை என்று முன்னர் என்னிடம் உடன்படிக்கை செய்யவில்லையா? என்று கேட்டு இப்போது இதன்பாலும் உன்னை நான் சேர்த்து வைத்தால் இதுவல்லாத மற்றொன்றையும் கேட்பாய் அல்லவா? என்று சொல்வான். வேறு எதையும் கேட்பதில்லை என்று உடன்படிக்கை செய்வான். பின்னர். சுவர்க்க வாயிலில் முன்னவை இரண்டைவிட அழகான மரத்தைக் காட்டப்படும் இரட்சகா! இதன் பக்கம் என்னை நெருக்கிவை என்று கூறுவான். சுவர்க்கம வாயில் பக்கம் அவனை நெருக்கி வைத்ததும் சுவர்க்காவாசிகளின் சப்தங்களை கேட்பான். அங்குள்ள உபசரணைகள் வசதிகள் கண்டு இரட்சகா! என்னை அதனுள் பிரவேசிக்கச்செய் என்று கூறுவான் ஆதமுடைய மகனே! (எனது அருட்கொடைகளை என்னிடம் கேட்பதிலிருந்து) உனக்கும் எனக்குமிடையில் எது தடையாக இருக்க முடியும்? என்று சொல்லி துன்யாவும் இன்னும் அது போன்றதும் உனக்கு கொடுத்தால் திருப்தி படுவாயா? என்ற அல்லாஹ் கேட்பான் இரட்சகா நீயே அகிலத்தாரின் இரட்சகன்! என்னை பரிகசிக்கின்றாயா? என்று கேட்பான். அல்லாஹ் இவனின் இந்த சொல்லைக் கேட்டு சிரித்துவிட்டு நான் உன்னை பரிகசிக்கவில்லை என்றும், நான் நாடியதின் மீது சக்தி பெற்றவன் என்று கூறுவான். (முஸ்லிம்: இப்னு மஸ்வூத் (ரலி)

சுவனத்தில் இறைவனைக் காணும் பாக்கியம்

சுவனவாழ்கையில் கிடைக்கும் எல்லாப் பாக்கியங்களை விட இறைவனைக் கானும் காட்சியே பெரிய பாக்கியம்.

சுவர்க்கவாசிகள் சுவர்க்கம் புகுந்து விடுவார்களானால் உங்களுக்கு இன்னும் அதிகமான ஒன்றை நீங்கள் நாடுகிறீர்களா? என்று அல்லாஹ் கேட்பான் இரட்சகனே! நீ எங்களின் முகங்களை வெண்மையாக்கவில்லையா? (இதைவிட வேறு எங்களுக்கு என்ன வேண்டும்?) என்று சொல்வார்கள். திரை அகற்றப்படும் (அல்லாஹ்வை காண்பார்கள்) தங்கள் இரட்சகனை காண்பதைவிட வேறொரு பிரியமான பொருளை அவர்கள் கொடுக்கப்படமாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், திர்மிதி: ஸுஹைப் (ரலி)

மறுமையில் பவுர்ணமி இரவன்று சந்திரனை நீங்கள் பார்ப்பதைப் போன்ற நீங்கள் உங்கள் இரட்சகனை பார்பீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், அபூதாவூது, திர்மிதி: ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி)

சுவர்க்கத்தில் 1000 படித்தரங்களுண்டு ஒவ்வொன்றுக்கும் இடைபட்ட தூரம் வானம் பூமிக்கு இடைப்பட்ட தூரம் போல் இருக்கிறது. ஃபிர்தவ்ஸ் என்பதுதான் உயர்வான படித்தரமாகும். இதிலிருந்து தான் சுவர்க்கத்தில் 4 ஆறுகள் புறப்படுகின்றன. அதன் மேல் தான் அல்லாஹ்வின் அர்ஷு இருக்கிறது. நீங்கள் அல்லாஹ்விடம் துஆசெய்தால் ஃபிர்தவ்ஸையே கேளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி: உபாதத் இப்னு ஸாமித் (ரலி)

என்னுடைய நல்லடியார்களுக்கு எந்த கண்ணும் (இதுவரை) கண்டிராத எந்த காதும் செவியுற்றிராத எந்த உள்ளத்திலும் தோன்றிடாதவைகளால் நான் தயாரித்து வைத்துள்ளேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு (32:17) வசனத்தையும் ஓதிக்காட்டினார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதி: அபூஹுரைரா (ரலி)

அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது. 32:17

அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. (55:56)

அவர்கள் வெண்முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள். (55:58)

ஹூர் (என்னும் அக்கன்னியர் அழிகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர (55:72)

அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. (55:74)

(அவர்கள்) பசுமையான இரத்தினக் கம்பளங்களின் மீதும், அழகு மிக்க விரிப்புக்கள் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள். (55:76)

நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி, (56:35 )

அப்பெண்களைக் கன்னிகளாகவும், (56:36)

(தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும், (56:37)

வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்). (56:38)

மேலும் நபி (ஸல்) கூறினார்கள்: சுவனத்துப் பெண்களுடைய கால்களின் வெண்மை எழுபது ஆடைகளுக்கும் அப்பால் இருந்ததும் காணப்படக் கூடியதாக இருக்கும் (எலும்புக்குள் இருக்கும் மஜ்ஜையும் காணமுடியும். அவர்கள் பவளமும் முத்துமாக இருப்பார்கள். (திர்மிதி, இப்னு ஹிப்பான்:இப்னு மஸ்வூத் (ரலி)

நபி(ஸல்) அவர்கள்: சுவனத்தில் இறைவிசுவாசிகளுக்கு எத்தனையோ பெண்களுடன் உறவு கொள்ளும் ஆற்றல் வழங்கப்படும் என்ற போது நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் இறைத்தூதரே! இது இயலுமா? என்று கேட்டனர், அதற்கு நபி (ஸல்) அவர்கள் (அன்று) நூறு பேர்களின் பலம் வழங்கப்படும் என்று கூறினார்கள். (திர்மிதி, இப்னுஹிப்பான்: அனஸ் (ரலி)

சுவனத்துப் பெண்களில் ஒரு பெண் இப்பூமியில் உள்ளவர்களுக்குக் காட்சி அளித்தால், சுவனத்துக்கும் பூமிக்கும் இடைப்பட்ட பகுதிகளைப் பிரகாசிக்கச் செய்வாள். அந்த இரண்டிற்கும் இடையே நறுமணம் வீசச் செய்வாள். அவள் தலையில் உள்ள முக்காடு இவ்வுலகையும், அதில் உள்ளவற்றையும் விடமேலானதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி, அஹ்மத்: அனஸ் (ரலி)

மறுமையை நம்புதல்

இஸ்லாமிய கொள்கையின் அடிப்படை

தவ்ஹீத் ரிஸாலத் ஆஹிரத்

ஏகத்துவம் தூதுத்துவம் மறுமை

மார்க்க கொள்கை வாழும் முறை எதற்காக வாழ்கிறோம்

அல்லாஹ்வை தவிர படைப்பினங்கள் அனைத்துக்கும் அழிவிற்கு ஒரு தவணை உள்ளது. அந்நாளில் அவை அழிந்து போகும். அழிவு இருவகை : 1. தனிமனிதனின் அழிவு (மரணம்) 2. ஒட்டு மொத்த படைப்பினங்களை அழிக்கப்படுதல் (கியாமநாள்).

மறுமை எவ்வாறு வருகிறது?

முதலில் மரணம். பின்னர் (கப்ர்) மண்ணறையில். பின்னர் உலகம் முழுவதும் அழிக்கப்படுதல். பின்னர் அனைவரும் மண்ணறையில் இருந்து எழுப்பப்பட்டு கேள்வி கணக்குக்கு ஆளாகுதல். அமல்களுக்கு ஏற்ப கூலி அணு அளவும் மோசம் செய்யப்படாமல் நீதியுடன் அல்லாஹ் தீர்ப்பளித்தல். சுவனம், நரகம் செல்லுதல். அங்கு நிரந்தரமாய் அல்லது தண்டனை சிறிது அனுபவித்த பின் சுவனம் செல்தல் அல்லது நிரந்தர நரகில். மரணம் என்பதே இல்லை.

மரணம்:

3:185 ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சந்தித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.

4:78 ''நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும். நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! (போருக்குச் சென்ற முனாஃபிக்களுக்கு) ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் ''இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது என்று கூறுகிறார்கள்; ஆனால், அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டாலோ, ''இது உம்மிடம் இருந்துதான் ஏற்பட்டது'' என்று கூறுகிறார்கள், (நபியே! அவர்களிடம்) கூறும்; ''எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்திருக்கின்றன. இந்த மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எந்த ஒரு விஷயத்தையும் அவர்களுக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லையே!''

55:26 (பூமியில்) உள்ள யாவரும் அழிந்து போகக்கூடியவரே-

பாவிகளின் உயிரைப் பறிக்கும் போது

8:50 மலக்குகள் நிராகரிப்போரின் உயிர்களைக் கைப்பற்றும் போது நீங்கள் பார்ப்பீர்களானால், மலக்குகள் அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கூறுவார்கள்; ''எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்'' என்று.

மூஃமின்களின்; உயிரைப் பறிக்கும் போது

41:30 நிச்சயமாக எவர்கள்; ''எங்கள் இறைவன் அல்லாஹ்தான்'' என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, ''நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் - உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்'' (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்.

41:31 ''நாங்கள் உலக வாழ்விலும், மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள்; மேலும் (சுவர்க்கத்தில்) உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கிறது - அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்.

(கப்ர்) மண்ணறை வாழ்க்கை

மண்ணறையில் மலக்குகள் கேள்வி, கப்ர் வேதனை, தொழுகையில் நபி துஆ, '' அல்லாஹும்ம இன்னீ அவூதுபிக்க மின் அதாபில் கப்ர் '' ( பொருளுடன் ), மரணமடைந்தவரின் பறிக்கப்பட்ட ரூஹ் சிஜ்ஜீன், இல்லியூன் பதிவு செய்யப்பட்ட பின் கப்ருக்கு திரும்பி வருதல், கியாம நாள் வரையில் கப்ரில்.

ஹதீஸ்: 3240

கியாம நாள்

முதல் சூர் (எக்காளம்) ஊதப்படுதல், ஒட்டு மொத்த உலக படைப்பினங்கள் அழிக்கப்படுதல்.

36:49 அவர்கள் ஒரே ஒரு பேரொலிக்காகக் காத்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறில்லை அவர்கள் வழக்காடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே அது அவர்களைப் பிடித்துக் கொள்ளும்.

36:50 அப்போது அவர்கள் வஸிய்யத்து சொல்ல சக்தி பெறமாட்டார்கள்; தம் குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.

இரண்டாம் சூர் (எக்காளம்) ஊதப்பட்டு கப்ர்களிலிருந்து மனிதர்கள் எழுந்து வருதல்

36:51 மேலும், ஸூர் ஊதப்படடதும், உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவார்கள்.

36:52 ''எங்களுடைய துக்கமே! எங்கள் தூங்குமிடங்களிலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?'' என்று அவர்கள் கேட்பார்கள்; அர்ரஹ்மான் வாக்களித்ததும், (அவனுடைய) தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுதான்'' (என்று அவர்களுக்குக் கூறப்படும்).

36:53 ஒரே ஒரு பேரொளி தவிர (வேறொன்றும்) இருக்காது உடன், அவர்கள் யாவரும் நம்முன் கொண்டுவரப்படுவார்கள்.

மறுமை அடையாளங்கள்

16:77. மேலும், வானங்களிலும், பூமியிலும் உள்ள இரகசியம் அல்லாஹ்வுக்கே உரியது ஆகவே, (இறுதித் தீர்ப்புக்குரிய) வேலையின் விஷயம் இமை கொட்டி விழிப்பது போல் அல்லது (அதைவிட) சமீபத்தில் இல்லாமலில்லை; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுள்ளவனாக இருக்கின்றான்.

14:48 இந்த பூமி வேறு பூமியாகவும், இன்னும் வானங்களும் மாற்றப்படும் நாளில் (அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.) மேலும் அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வின் முன்னிலையில் வெளியாகி நிற்பார்கள்.

மறுமை எப்போது?

33:63 (நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளையை பற்றி மக்கள் உம்மைக் கேட்கின்றனர்; ''அதைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது'' என்று நீர் கூறுவீராக அதை நீர் அறிவீரா? அது சமீபத்திலும் வந்து விடலாம்.

31:34 நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.

ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) உரையாடல். மறுமை எப்போது வரும்?

23:101 எனவே ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டு விட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையே பந்துத்துவங்கள் இருக்காது ஒருவருக்கொருவர் விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள்.

20:108 அந்நாளில் அவர்கள் (ஸூர் மூலம்) அழைப்பவரையே பின்பற்றிச் செல்வார்கள்; அதில் எத்தகைய கோணலும் இருக்காது. இன்னும் (அவ் வேளை) அர்ரஹ்மானுக்கு (அஞ்சி) எல்லாச் சப்தங்களும் ஒடுங்கி விடும். கால்கள் (மெதுவாக அடியெடுத்து வைக்கும்) சப்தத்தைத் தவிர (வேறெதையும்) நீர் கேட்கமாட்டீர்.

70:8 வானம் உருக்கப்பட்ட செம்பைப் போல் ஆகிவிடும் நாளில்-

70:9 இன்னும், மலைகள் பஞ்சைப் போல் ஆகிவிடும் (நாளில்)-

70:10 (அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாரிக்கமாட்டான்.

70:11 அவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி ஈடுகொடுக்கப் பிரியப்படுவான்; தன் மக்களையும்-

70:12 தன் மனைவியையும், தன் சகோதரனையும்-

70:13 அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்-

70:14 இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிரியப்படுவான்).

70:15 அவ்வாறு (ஆவது) இல்லை ஏனெனில் நிச்சயமாக அ(ந்நரகமாவ)து கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாகும்.

70:16 அது (சிரசத்) தோல்களை (எரித்து) கழற்றி விடும்.

70:17 (நேர்வழியைப்) புறக்கணித்துப் புறங்காட்டிச் சென்றோரை அ(ந்நரகத்தீயான)து அழைக்கும்.

2:166 (இத்தவறான வழியில்) யாரைப் பின்பற்றினார்களோ அ(த்தலை)வர்கள் தம்மைப் பின்பற்றியோரைக் கைவிட்டு விடுவார்கள், இன்னும் அவர்கள் வேதனையைக் காண்பார்கள்; அவர்களிடையேயிருந்த தொடர்புகள் யாவும் அறுபட்டுவிடும்.

2:167 (அத்தலைவர்களைப்) பின்பற்றியவர்கள் கூறுவார்கள்; ''நமக்கு (உலகில் வாழ) இன்னொரு வாய்ப்புக் கிடைக்குமானால், அ(த்தலை)வர்கள் நம்மைக் கைவிட்டு விட்டதைப் போல் நாமும் அவர்களைக் கைவிட்டு விடுவோம்.'' இவ்வாறே அல்லாஹ் அவர்கள் செய்த செயல்களை அவர்களுக்குப் பெருந்துக்கம் அளிப்பதாக எடுத்துக் காட்டுகிறான்; அன்றியும், அவர்கள் நரக நெருப்பினின்றும் வெளியேறுகிறவர்களும் அல்லர்.

5:36 நிச்சயமாக, நிராகரிப்போர்கள் - அவர்களிடம் இப்பூமியிலுள்ள அனைத்தும், இன்னும் அதனுடன் அது போன்றதும் இருந்து, அவற்றை, மறுமையின் வேதனைக்குப் பகரமாக அவர்கள் இழப்பீடாகக் கொடுத்தாலும், அவர்களிடமிருந்து அவை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா. மேலும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.

3:30 ஒவ்வோர் ஆத்மாவும், தான் செய்த நன்மைகளும்; இன்னும், தான் செய்த தீமைகளும் அந்த(த் தீர்ப்பு) நாளில் தன்முன்கொண்டு வரப்பட்டதும், அது தான் செய்த தீமைக்கும் தனக்கும் இடையே வெகு தூரம் இருக்க வேண்டுமே என்று விரும்பும்; அல்லாஹ் தன்னைப்பற்றி நினைவு கூறுமாறு உங்களை எச்சரிக்கின்றான்; இன்னும் அல்லாஹ் தன் அடியார்கள் மீது கருணை உடையோனாக இருக்கின்றான்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் எங்களுக்க உபதேசம் செய்தார்கள். அதில் கூறினார்கள்: மக்களே! நிச்சயமாக நீங்கள் மறுமையில் அல்லாஹுதஆலாவின் சமுகத்தில் செருப்பு அணியாதவர்களாவும், ஆடை அணியாதவர்களாகவும் கத்னா செய்யப்படாதவர்களாகவும் (மஹ்ஷர் மைதானத்தில்) ஒன்று திரட்டப்படுவீர்கள்.

அல்லாஹ் கூறுகிறான்:

....முதலில் படைப்புகளைப் படைத்தது போன்றே, (அந்நாளில்) அதனை மீட்டுவோம்; இது நம் மீது வாக்குறுதியாகும்; நிச்சயமக நாம் இதனை செய்வோம். (அல்குர்ஆன் 21:104)

அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக படைப்புகளில் முதன் முதலாக (கியாமத் நாளில்) ஆடை அணிவிக்கப்படுபவர் நபி இப்றாஹீம் (அலை) ஆவார்கள், மேலும் கியாமத் நாளில் எனது உம்மத்தைச் சேர்ந்த சில மனிதர்கள் கொண்டு வரப்படுவார்கள். அவர்களை இடப்புறமாக (நரகின் பக்கம்) பிடித்தச் செல்லப்படும். அப்பொழுது நான் என் இரட்சகனே! இவர்கள் என் தோழர்களாயிற்றே! (இவர்கள் எனது சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாயிற்றே) என்று கூறுவேன். அப்பொழுது எனக்குக் கூறப்படும்: உமக்குப் பின்னால் இவர்கள் தீனில் எதனை புதிதான உண்டாக்கினார்கள் என்பதை நீர் அறியமாட்டீர்.அப்போது நான் நல்லடியார் நபி ஈஸா (அலை)) கூறியது போல் கூறுவேன்: ''நான் அவர்களுடன் இருந்தவரை அவர்களின் செயலை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். நீ என்னைக் கைப்பற்றிய பின்னால் நீ தான் அவர்களைக் கவனிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்களின் மீதும் சாட்சியாளனாக இருக்கிறாய்! அன்றி நீ அவர்களை மன்னித்து விட்டாலோ, (அதனை எவராலும் தடுக்க முடியாது) நிச்சயமாக நீதான் (யாவரையும்) மிகைத்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறாய்''. (அல்குர்ஆன் 5:117,118)

அப்பொழுது எனக்குச் சொல்லப்படும்: நீ இவர்களை விட்டுப் பிரிந்ததிலிருந்து இவர்கள் தங்கள் குதிங்கால்கள் மீது பின்வாங்குபவர்களாகி விட்டனர். (தினை விட்டும், தீனின் சட்டதிட்டங்களை விட்டும் விலகிச் செல்பவர்களாக இருந்தனர்) (புகாரி, முஸ்லிம் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி))

மறுமையை மறுப்போர் பற்றி

6:70 (நபியே!) யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ, இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றி விட்டதோ அவர்களை விட்டுவிடும். எனினும் அவர்களுக்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த செயல்களின் காரணமாக ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் (எனும் உண்மையை) குர்ஆனைக் கொண்டு நினைவுறுத்தும். அந்த ஆத்மாவுக்கு அல்லாஹ்வைத்தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை (தாங்கள் செய்த பாவத்திற்கு) ஈடாக (தங்களால் இயன்ற) அத்தனையும் கொடுத்தாலும், அது அவர்களிடமிருந்து ஒப்புக்கொள்ளப்படமாட்டாது இவர்கள் தாங்கள் செய்த செய்கைகளாலேயே தங்களை நாசமாக்கிக் கொண்டார்கள்; இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் இவர்களுக்குக் கொதிக்கும் நீரும் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.

7:51 (ஏனென்றால்) அவர்கள் தங்களுடைய மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டார்கள்; இன்னும் அவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கி விட்டது எனவே அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்த இறுதி நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்று, இன்று நாம் அவர்களை மறந்து விடுகிறோம்.

மறுமை விசாரணை பற்றி

2:281 தவிர, அந்த நாளைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்; அன்று நீங்களனைவரும் அல்லாஹ்விடம் மீட்டப்படுவீர்கள்; பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்குரிய (கூலி) பூரணமாகக் கொடுக்கப்படும்; மேலும் (கூலி) வழங்கப்படுவதில் அவை அநியாயம் செய்யப்படமாட்டா.

30:14 மேலும் (இறுதித் தீர்ப்புக்குரிய) நாள் நிலைபெறும்போது - அந்நாளில், அவர்கள் (நல்லோர், தீயோர் எனப்) பிரிந்து விடுவார்கள்.

30:55 அன்றியும், (நியாயத் தீர்ப்புக்குரிய) நாழிகை வரும் அந்நாளில் குற்றவாளிகள் தாங்கள் (இவ்வுலகில்) ஒரு நாழிகையே அன்றி (அதிக நேரம்) தங்கி இருக்கவில்லை என்று பிரமாணம் செய்வார்கள்; இவ்வாறு (இவ்வுலகிலும் உண்மையிலிருந்து) அவர்கள் திருப்பப்படுபவர்களாக இருந்தனர்.

99:7 எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.

99:8 அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.

சுவன நரகவாசிகள் உரையாடல்

7:50 நரகவாசிகள், சுவர்க்கவாசிகளை அழைத்து, ''தண்ணீரில் கொஞ்சமேனும் அல்லது அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள உணவில் சிறிதேனும் எங்களுக்குக் கொடுங்கள்'' எனக் கேட்பார்கள்; அதற்கு அவர்கள்; ''நிச்சயமாக அல்லாஹ் இவ்விரண்டையும் காஃபிர்கள் மீது தடுத்து (ஹராம் ஆக்கி) விட்டான்'' என்று கூறுவார்கள்.

74:40 (அவர்கள்) சுவர்க்கச் சோலைகளில் (இருப்பார்கள்; எனினும்) விசாரித்தும் கொள்வார்கள்-

74:41 குற்றவாளிகளைக் குறித்து-

74:42 ''உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?'' (என்று கேட்பார்கள்.)

74:43 அவர்கள் (பதில்) கூறுவார்கள்; ''தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை.

74:44 ''அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை.

74:45 ''(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம்.

74:46 ''இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம்.

74:47 ''உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்'' எனக் கூறுவர்).

பாவிகளுக்கு எச்சரிக்கை

2:206 ''அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்'' என்று அவனிடம் சொல்லப்பட்டால், ஆணவம் அவனைப் பாவத்தின் பக்கமே இழுத்துச் செல்கிறது அவனுக்கு நரகமே போதுமானது நிச்சயமாக அ(ந் நரகமான)து தங்குமிடங்களில் மிக்கக் கேடானதாகும்.

14:42 மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான்.

45:21 எவர்கள் தீமைகள் செய்கிறார்களோ அவர்களை, எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்குச் சமமாக நாம் ஆக்கிவிடுவோம் என்று எண்ணுகின்றார்களா? அவர்கள் உயிருடனிருப்பதும், மரணமடைவதும் சமமாகுமா? அவர்கள் முடிவு செய்து கொண்டது மிகவும் கெட்டதாகும்.

தவ்பா செய்க

4:17 எவர்கள் அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பின்னர் விரைவில் மன்னிப்புத் தேடி கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு உண்டு. அல்லாஹ் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறான். இன்னும் அல்லாஹ் நன்கறிந்தோனும். ஞானம் உடையோனுமாக இருக்கின்றான்.

4:18 இன்னும் எவர்கள் தீவினைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது, ''நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன்'' என்று கூறுகின்றார்களோ, அவர்களுக்கும், எவர் காஃபிர்களாகவே மரிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பு இல்லை, இத்தகையோருக்குத் துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.

66:8 ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் (சதா) ஓடிக் கொண்டே இருக்கும்; (தன்) நபியையும் அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (அன்று ஈடேற்றம் பெற்ற) அவர்களுடைய பிரகாசம் (ஒளி) அவர்களுக்கு முன்னும் அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும்; அவர்கள் ''எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்'' என்று கூறி(ப் பிரார்த்தனை செய்து) கொண்டு இருப்பார்கள்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக நிச்சயமாக நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கும் அதிகமாக அல்லாஹுதஆலாவிடம் பிழைப் பொறுத்திட வேண்டுகிறேன், அவனளவில் தவ்பாச் செய்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவிமடுத்தேன். (புகாரி : அபூஹுரைரா (ரலி)

சூரியன் மறைந்ததிலிருந்த அது உதயமாகும் முன்பு (இரவில்) யார் தவ்பாச் செய்கிறாரோ அவரின் தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான், என்ற நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் : அபூஹுரைரா (ரலி)

(மரணத் தருவாயில்) தொண்டைக் குழியை உயிர் வந்து சேராமலிருக்கும் வரை (உயிர் பிரிவதற்காக தொண்டைக் குழியில் உயிர் இழுத்துக் கொண்டிருப்பதற்கு முன்பு வரை) நிச்சயமாக அல்லாஹுதஆலா அடியானின் தவ்பாவை ஏற்றுக் கொள்கிறான், என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (திர்மிதி) அபூஅப்திர்ரஹ்மான் உமர் பின் கத்தாப் (ரலி)

அல்லாஹ்வின் தண்டனையை பார்த்த பின் செய்யும் தவ்பா பயனளிக்காது

ஃபிர்அவ்ன் ஈமான் கொள்ளுதல்

40:85 ஆயினும், நம் (கட்டளையால் உண்டான) வேதனையைக் கண்டபோது, அவர்கள் கொண்ட நம்பிக்கை அவர்களுக்குப் பயனளிக்கவில்லை. (இதுவே) அல்லாஹ்வுடைய வழியாகும்; அவனுடைய அடியார்களுக்கு (முன்னரும் இவ்வாறே) நிகழ்ந்திருக்கின்றது. ஆதலால், அந்நேரத்தில் காஃபிர்கள் நஷ்டத்தையே அடைந்தார்கள்.

மறுமை வெற்றி நல்லறங்கள் புரிவதில்


3:133 இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்), ஸஹாபிகள் அல்லாஹ்வைப் பயந்து நல்லறங்கள் புரிந்து தண்டனைகளை ஏற்றுக் கொண்டது மறுமை பயனை நாடியே!

No comments:

 
#b-navbar { height: 0px; visibility: hidden; display: none; }