பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!
அன்பு சகோதரர் அபு உமர் அவர்கள் தமிழ் முஸ்லிம் வலைப்பூவில் என்னுடைய தளத்தில் நான் சுட்டிக்காட்டிய குர்ஆன் வசனங்களுக்கு மறுப்பு தெரிவித்து அத்தகைய சூழல் நிலவவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்கள். வேறு எத்தகைய சூழலுக்கு அந்த வசனங்கள் பொருந்தும் என்பதை அவசியம் குறிப்பிடவும்.
நேசகுமாருக்கு பதிலளிக்கவில்லை அதை படிக்கக் கூடிய மற்றவர்கள் அவர் இட்டுக்கட்டும் பொய்யை அறிந்து கொள்ள நண்பர்கள் எழுதுவது உதவும் என்று அவர் கூறுவதை நான் ஏற்றுக் கொள்கிறேன். நான் குறிப்பிட்ட இறைவசனம் நேசகுமாருக்கு மட்டும் பதிலளிக்க கூடியவர்களுக்கு பொருந்து என்பதை அவரே குறிப்பிட்டு விட்டு பிறகு ஏன் குர்ஆன் வசனங்களைக் கொண்டு நான் விளையாடுவதாக அபாண்டத்தை சுமத்துகிறார் என்று தெரியவில்லை. நான் அல்லாஹ்வின் கூற்றுப்படி குர்ஆனைக் கொண்டு உங்களை நினைவுறுத்துகிறேன். (பார்க்க இறைவசனம் 6:70) ஆனால் அவரோ இறைவசனங்களைக் கொண்டு விளையாடுவதாக எத்தகைய ஆதாரமுமில்லாமல் எழுதுகிறார். அத்தகைய நிலையை விட்டும் நான் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன். மாற்று மதத்தவர்கள் படிக்கிறார்கள் என்பதற்காக ஓட்டுக மதவெறி என்று கூறிவிட்டு உண்மையை பூசி மெழுகுகிறார். நான் அவதானித்த வகையில் அவருடைய எழுத்தில் பூசி மெழுகுதல் நிறையவே காண கிடைக்கிறது.
சுனாமி குறித்து நான் பதித்த இறைவசனத்துக்கு என்னுடைய தளத்தில் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இன்னும் என்னவெல்லாமோ எழுதும் அபு உமர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நான் எழுதியது தவறென்றால் அல்லவா மன்னிப்பு கேட்க முடியும். ஒவ்வொருவருடைய புரிந்துணர்வும் வெவ்வேறாக இருக்கும் பட்சத்தில் அவருடைய புரிந்துணர்வை, அவர் இவ்வாறு சொல்வதால் என் மீது திணிப்பதாகவே நான் கருதுகிறேன்.
எக்காலத்திற்கும் ஏற்ற குர்ஆன் என்று நாம் கூறுகின்றோம். நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையே குர்ஆனாக இருந்தது என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதிஸ். இப்ராஹீம் நபியவர்கள் எதற்கும் தன் இறைவன்பால் முகம் திருப்புபவராக இருந்தார் என்ற இறைவசனம் இது அத்தனையும் செவிமடுத்துக் கொண்டே நம்மிடையே ஏற்படக்கூடிய நிகழ்வுகளுக்கு மட்டும் 'அந்த நிலைமை இப்போது இல்லை' என்றும் 'இயற்கை சீற்றம் இறை சித்தமா?' என்றும் பேசிக் கொண்டிருக்கிறோமே இது சரியா சகோதரர்களே? அறிந்து கொள்ளுங்கள்! இறை சித்தமா? என்ற சொல்லில் தொக்கி நிற்பது கேள்வியல்ல ஈமானின் பலவீனம். உறுதியான ஈமானில் திளைத்த உள்ளம் இயற்கை சீற்றம் இறை சித்தம்தான் என்று அடித்து சொல்லும்.
இன்னும் கவனியுங்கள். இடி தாக்கி அழித்த ஒரு இடத்தைப் பற்றியோ அல்லது மனிதர்களைப் பற்றியோ நிராகரிக்கும் மக்கள் என்ன கூறுகிறார்கள்: 'அது இயற்கையாக நடக்குது. நாம என்ன செய்ய முடியும்' நாம் ஒவ்வொருவரும் இதை செவிமடுத்திருப்போம். ஆனால் நம்பிக்கை கொண்ட மக்களைப் பார்த்து அல்லாஹ் கூறுகிறான் "இன்னும் அவனே (அல்லாஹ்வே) இடிகளை விழச் செய்து அதைக் கொண்டு தான் நாடியவரைத் தாக்குகின்றான்..." (13:13). இப்போது சிந்தியுங்கள். நிராகரிக்கும் மக்கள் கூறும் 'இயற்கை' என்ற நிராகரிப்புக்கும், சகோதரர் சலாஹுத்தீனின் 'இயற்கை சீற்றம் இறை சித்தமா? என்ற கேள்விக்கும் ஏதேனும் வித்தியாசம் தென்படுகிறதா? நம்பிக்கை கொண்ட பின் மொழிகின்ற வார்த்தைகளால் நிராகரிக்கும் மக்களாக ஆகிவிட வேண்டாம் என்று தான் சொல்ல தோன்றுகிறது. இங்கே இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். மேலே நான் குறிப்பிட்ட இறைவசனத்தை (13:13) படிக்கும் நம்பிகையற்ற மக்களுக்கு இறைவன் கொடுமையாளனாக தெரிகிறான் என்பதற்காக இறை வசனங்களைக் கூறாமல் இருக்க முடியுமோ? இன்னும் நிறைய எழுத வேண்டும் நேரமின்மை காரணமாக இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
அபு உமரை தவிர்த்து மற்றவர்கள் பதிலளித்தால் நல்லது. ஏனென்றால் உங்கள் இஸ்லாம் மின் மன்றத்தில் வரதட்சணை சம்பந்தமாக வாதாடியதில் இருந்து என் மீதான நல்லெண்ணம் அவருக்கில்லை என்பதாலும், இன்னும் "(பிறரின் குறைகளை)நீங்கள் துருவி துருவி ஆராந்து கொண்டிராதீர்கள்"... (49:12) என்ற இறைவசனத்தை மறந்து தன்னுடைய அத்தனை பதிவுகளிலும் அடுத்தவரை குறை சொல்லிக் கொண்டே இருப்பதாலும் இதைச் சொல்கிறேன்.
இறைவன் நாடினால் மீண்டும் சந்திப்போம்.
Monday, April 04, 2005
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment