Thursday, May 24, 2007

வேதங்களை நம்புவது! (பாகம்-1)

வேதம் என்றால் எந்தவித மறுப்பும் இல்லாமல் அப்படியே ஏற்றுக் கொள்ளக்கூடிய சொல், சட்டம், வாழ்க்கை நடைமுறை, வணக்க வழிபாட்டு முறைகளைக் கூறக்கூடியவை போன்றவற்றைக் கூறுகிறார்கள். ஒன்றை வேதம் என்று ஏற்றுக் கொள்ளவேண்டுமானால் அது குறைபாடற்ற இறைவனிடமிருந்து வந்திருக்க வேண்டும். மனிதன், மனிதர்கள், பேரறிஞர்கள், ஒரு குழு, ஒருநாடு ஏன் முழு உலகும் சேர்ந்து உருவாக்கினாலும் அப்படிப்பட்ட ஒன்றை உருவாக்க முடியாது. மனிதனையும் அவன் வாழும் முழு உலகையும் படைத்த வல்ல இறைவனால் மட்டுமே அப்படிப்பட்ட ஒரு வேதத்தைக் கொடுக்க முடியும். இதை தனது இறுதித் தூதருக்கு வழங்கிய இறுதி வேதத்தில் வல்ல இறைவன் ஒரு சவாலாகவே கூறுகிறான்.

''இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று), அவர்களில் ஒரு சிலர் சிலருக்கு உதவி புரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வரமுடியாது'' என்று (நபியே) நீர் கூறும். 17:88

அல்லது, இ(வ்வேதத்)தை நீர் இட்டுக் கட்டினீர் என்று அவர்கள் கூறுகின்றனரா? அல்ல. அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள். 52:33

ஆகவே, (இவ்வாறெல்லாம் கூறும்) அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், இ(வ்வேதத்)தைப் போன்ற ஒரு செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும். 52:34

அல்லது ''இ(வ் வேதத்)தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்'' என்று அவர்கள் கூறுகிறார்களா? ''(அப்படியானால்) நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள் - நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்! அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு சாத்தியமான எல்லோரையுமே (இதற்குத் துணை செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக.
11:13


அவர்கள் உங்களுக்கு பதிலளிக்கா விட்டால்; ''அறிந்து கொள்ளுங்கள், நிச்சயமாக இது அல்லாஹ்வின் ஞானத்தைக் கொண்டே அருளப்பட்டது இன்னும் வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறில்லை இனியேனும் நீங்கள் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடுவீர்களா?'' (என்று கூறவும்.) 11:14

இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை(யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொன்டு வாருங்கள். 2:23

(அப்படி) நீங்கள் செய்யாவிட்டால், அப்படிச் செய்ய உங்களால் திண்ணமாக முடியாது... 2:24

மேலும் வேதம் என்பது உலகின் அனைத்து மொழி, இன, நிற, பிரதேச மக்களுக்கும் - எல்லாக் காலங்களுக்கும் பொருந்திப் போவதோடு, குறையற்றதாகவும், தனக்குத் தானே முரண்பட்டுக் கொள்ளாமலும், நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை மறுக்கும் விதமாகவும் இல்லாமல் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட வேதத்தை வல்ல இறைவன் தான் தேர்ந்தெடுக்கும் மிகச்சிறந்த மனிதர்கள் மூலம் மக்களுக்கு வாழ்க்கை நெறியாக அதை அளிக்கிறான். பூமியில் முதன் முதலில் வாழ வந்த மனிதர் ஆதம் (அலை ) முதல் உலக முடிவுநாள் வரை வாழ உள்ள அனைத்து மக்களுக்கும் தன் வழி காட்டுதலை வழங்கியுள்ளான். அப்படி அல்லாஹ் வழங்கிய அனைத்து வேதங்களையும் நம்புவது தான் வேதங்களை நம்புவது.

(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும்; உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கைக் கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை (மறுமையை) உறுதியாக நம்புவார்கள். 2:4 (2:136,177,285,3:84)

ஒரு நாள் நபி (ஸல்) அவர்களோடு அமர்ந்து இருந்தோம் அப்பொழுது அங்கு ஒரு மனிதர் வந்தார்(தோன்றினார்). அவர் வெண்ணிற ஆடையை அணிந்து இருந்தார். மிகவும் கருமையான முடிகளை உடையவராகவும், எந்த பிரயாண களைப்பும் (அடையாளமும்) அற்றவராகவும் இருந்தார். நாங்கள் யாரும் அவரை அறிந்திருக்கவில்லை. அவர் நபி (ஸல்) அவர்களுக்கு மிக அருகில் வந்து தமது முழங்கால்கள் நபி (ஸல்) அவர்களுடைய முழங்கால்களோடு படுமாறு அமர்ந்து. தமது கைகளை அவரது தொடைகளின் மீது வைத்தவாறு யாமுஹம்மத் ''இஸ்லாம் என்றால் என்ன? என்று எனக்கு அறிவிப்பீராக'', என்று கேட்டார்?.அதற்கு நபி (ஸல்) அவர்கள் இஸ்லாம் என்பது வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வை தவிர (வேறு) யாரும் இல்லை என்றும், முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுவதும். தொழுகையை நிறை வேற்றுவதும், ஜகாத் கொடுப்பதும் ரமலானில் நோன்பு நோற்பதும், பிரயாணத்திற்கான சக்தி பெற்றவர்கள் ஹஜ் செய்வதும் ஆகும் என்று கூறினார்கள். அப்பொழுது அந்த மனிதர் நீர் உண்மையே கூறினீர் என்று சொன்னார்.நாங்களெல்லாம் அவர் கேள்வி கேட்பதையும் பின்பு அதை உறுதிப்படுத்துவதையும் கண்டு ஆச்சர்யம் அடைந்தோம். பிறகு அவர் ''ஈமான் என்றால் என்னவென்று கூறுவீராக?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஈமான் என்பது அல்லாஹ்வையும், அவனது மலக்குகளையும் (வானவர்களையும்), அவனது வேதங்களையும், அவனது தூதர்களளையும், இறுதி நாளையும், நன்மை தீமை யாவும் விதிப்படி நடக்கிறது என்றும் நம்புவதாகும் எனக் கூறினார்கள். அதற்கு அவர் நீர் உண்மையை கூறினீர் என பதில் அளித்துவிட்டு. ''இஹ்ஸான் என்றால் என்ன? என அறிவீப்பீராக'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இஹ்ஸான் என்பது நீர் அல்லாஹ்வை காண்பது போன்று வணங்குவதாகும். நீர் பார்க்கவில்லை என்றாலும் அவன் உம்மை பார்த்துக் கொண்டுருக்கிறான். என பதில் கூறினார்கள் பின்னர் அவர் அஸ்ஸா என்பது (மறுமை நாள் அந்த நேரத்தைப்) பற்றி அறிவீப்பிராக? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இது விசயம் குறித்து கேள்வி கேட்கபடுப்படுவரை விட, கேட்பவர் இது பற்றி அதிகமாக அறிந்தவர் என்று கூறினார்கள் பின்னர் அவர் அதற்கான அடையாளங்களைக் கூறுவீராக? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அடிமைப் பெண் தனது எஜமானியை பெற்றெடுப்பாள். காலணி இல்லாமல் வறுமையான(ஏழ்மையான) ஆடு மேய்த்துக் கொண்டிருப்பவர்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டுவதில் போட்டி போடுவார்கள் என்றும் கூறினார்கள். மேலும் வந்தவர் போனபின் நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு உமரே! கேள்வி கேட்டவர் யாரென்று தெரியுமா? என்று கேட்டார்கள்,
அல்லாஹ்வும் அவன் தூதருமே அறிவார்கள் எனக்கூறினேன். பின்பு நபி (ஸல்) அவர்கள், அவர்தான் ஜீப்ரயீல் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை கற்றுக் கொடுப்பதற்காக வந்தார்கள் எனக் கூறினார்கள். ஹதீஸ் சுருக்கம்;:முஸ்லிம் உமர் (ரலி).
முதல் மனிதர் ஆதம் (அலை) முதல் வேதம்.

(பின்பு, நாம் சொன்னோம்; ''நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.'' 2:38

ஒவ்வொரு சமுதாயத்திற்கும் வேதம்

ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்; ... 14:4

நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம், அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம்... 57:25

(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்;. அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்;. அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்;... 2:213

No comments:

 
#b-navbar { height: 0px; visibility: hidden; display: none; }