குர்ஆனில் பெயர் கூறப்பட்ட வேதங்கள்.
மூஸா (அலை) தவ்ராத் --- 2:53,5:44,66,68,17:2
ஈஸா (அலை) இன்ஜீல் --- 5:46,110
தாவூத் (அலை) ஸபூர் --- 4:163,17:55
முஹம்மது (ஸல்) அல்குர்ஆன் --- 39:1,2,42:7,14:4,15:9
சுஹ்ஃபு என்ற ஏடுகள் ---- 3:84, 87:18.19
இன்னும், நீங்கள் நேர்வழி பெறும்பொருட்டு நாம் மூஸாவுக்கு வேதத்தையும் (நன்மை தீமைகளைப் பிரித்து அறிவிக்கக்கூடிய) ஃபுர்கானையும் அளித்தோம் (என்பதையும் நினைவு கூறுங்கள்). 2:53
இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்; அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது. 5:46
உம்முடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்களைப் பற்றி நன்கு அறிவான்; நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத் திட்டமாக நாம் மேன்மையாக்கியிருக்றோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம். 17:55
நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். 15:9
''அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்; நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக. 3:84(2:136,177)
87:18 நிச்சயமாக இது முந்தைய ஆகமங்களிலும்-
87:19 இப்றாஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் தவ்ராத்தை தன் கரங்களால் எழுதினான். அதில் அவன் தன் படைப்பினங்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது (புகாரி)
தொடர்ந்து பல வேதங்களை அனுப்பியதன் காரணம்...
இறைவன் தூதர்களை அனுப்பி அவர்களுக்கு தன்னுடைய வேதத்தையும் கொடுத்து மக்களுக்கு வாழ்வியல் நெறியை போதிக்கச் செய்கிறான், தூதரும் தன் வாழ்நாள் முழுவதும் போதித்து பின் மரணமடைகிறார். அவர் விட்டுச் சென்ற வேதத்தை வழிகாட்டியாக வைத்துக் கொண்டு வாழ வேண்டிய மக்கள் தங்கள் சுய லாபத்திற்காக இறைவனின் வேதத்தை மறைத்தும், மாற்றியும், சேர்த்தும், குறைத்தும், கூட்டியும் விடுவதால் தொடர்ந்து பல வேதங்களை இறைவன் அனுப்பிக் கொண்டிருந்தான்.
(முஸ்லிம்களே!) இவர்கள் (யூதர்கள்) உங்களுக்காக நம்பிக்கை கொள்வார்கள் என்று ஆசை வைக்கின்றீர்களா? இவர்களில் ஒருசாரார் இறைவாக்கைக் கேட்டு அதை விளங்கிக் கொண்ட பின்னர், தெரிந்து கொண்டே அதை மாற்றி விட்டார்கள். 2:75
அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டுபின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான். 2:79
நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் - அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்;. மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள். 2:159
நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவார் இருக்கின்றார்கள் - அவர்கள் வேதத்தை ஓதும்போதுத் தங்கள் நாவுகளைச் சாய்த்து ஓதுகிறார்கள் - (அதனால் உண்டாகும் மாற்றங்களையும்) வேதத்தின் ஒரு பகுதிதானென்று நீங்கள் எண்ணிக் கொள்வதற்காக. ஆனால் அது வேதத்தில் உள்ளதல்ல ''அது அல்லாஹ்விடம் இருந்து (வந்தது)'' என்றும் அவர்கள் கூறுகிறார்கள்; ஆனால் அது அல்லாஹ்விடமிருந்து (வந்ததும்) அல்ல. இன்னும் அறிந்து கொண்டே அவர்கள் அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றார்கள். 3:78
தவிர வேதம் கொடுக்கப்பட்டோரிடம் அவர்கள் அதை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும், அதை மறைக்கக் கூடாது என்று அல்லாஹ் உறுதி மொழி வாங்கியதை (அம்மக்களுக்கு நபியே! நீர் நினைவுபடுத்துவீராக). அப்பால், அவர்கள் அதைத் தங்கள் முதுகுகளுக்குப் பின்னால் எறிந்து விட்டு அதற்குப் (பதிலாகச்) சொற்ப கிரயத்தைப் பெற்றுக் கொண்டார்கள் - அவர்கள் (இவ்வாறு) வாங்கிக் கொண்டது மிகக் கெட்டதாகும். 3:187
யூதர்களில் சிலர் வேத வாக்குகளின் (கருத்தை) அதற்குரிய இடத்திலிருந்து புரட்டுகின்றனர்;...4:46 அப்பால், அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்து விட்டதால் நாம் அவர்களைச் சபித்தோம்;. அவர்களுடைய இருதயங்களை இறுகச் செய்தோம்;. (இறை)வசனங்களை அதற்குரிய (சரியான) இடங்களிலிருந்து அவர்கள் மாற்றுகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்;... 5:13
...மேலும் அவர்கள் (வேத) வசனங்களை அவற்றுக்கு உரிய இடங்களிலிருந்து மாற்றி 'இன்ன சட்டம் உங்களுக்குக் கொடுக்கப் பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்;. அவை உங்களுக்கு கொடுக்கப்படா விட்டால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்' என்று கூறுகிறார்கள்;... 5:41
மேலும், நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப்பின் தொடர்ச்சியாக (இறை) தூதர்களை நாம் அனுப்பினோம்; இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் ரூஹுல் குதுஸி (என்னும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு வலுவூட்டினோம். உங்கள் மனம் விரும்பாததை (நம்) தூதர் உங்களிடம் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் கர்வம் கொண்டு (புறக்கணித்து) வந்தீர்களல்லவா? சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள்; சிலரை கொன்றீர்கள். 2:87
நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம்; ஆனால், அதில் மாறுபாடுகள் செய்யப்பட்டு விட்டன அன்றியும் உமது இறைவனிடமிருந்து ஏற்கனவே வாக்கு ஏற்படாது போயிருந்தால், அவர்களுக்கிடையே தீர்ப்பு அளிக்கப்பட்டே இருக்கும். நிச்சயமாக அவர்களும் ஆழ்ந்த சந்தேகத்திலேயே இருக்கின்றனர். 41:45
முந்தய வேதங்களின் நிலை
முந்தய வேதங்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு அனுப்பப்பட்டது, அவ்வேதங்களில் மனித கரங்களால் மாற்றம் ஏற்பட்டது, மனித கருத்துக்கள் புகுத்தப்பட்டது, மனிதர்கள் தங்கள் மனோ இச்சைப்படி இறைச் சட்டங்களைக் குறைத்தும், திரித்தும், காலத்திற்கு தக்கவாறு மாற்றியும் விட்டதால் அவ்வேதங்களை முஸ்லிம்கள் அவற்றைப் பின்பற்றக் கூடாது. குர்ஆனுக்கு முன்பு வேதங்கள் அனுப்பப்பட்டுள்ளது என்பதை நம்பினால் மட்டுமே போதுமானது. மேலும் நபி முஹம்மத்(ஸல்) அவர்களை இறுதி நபியாகவும், அவர்களுக்கு வழங்கியுள்ள அல்குர்ஆனை இறுதி வேதமாகயும், மறுமைநாள் வரை வரவிருக்கும் மக்களுக்கும் அல்குர்ஆனையே வேதமாகவும், மறுமை நாள் வரை சட்டத்திலோ, அதன் கருத்துகளிலோ எந்தவித மாற்றமும் தேவையில்லாத வகையிலும் அல்குர்ஆனை ஆக்கியிருப்பதோடு அல்குர்ஆனில் யாரும் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாதவாறு அதைப் பாதுகாக்கும் பொறுப்பையும் வல்ல இறைவனே
ஏற்றுக் கொண்டான்.
நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். 15:9
(நபியே!)''சாட்சியத்தில் மிகவும் பெரியது எது?'' எனக் கேளும்; ''அல்லாஹ்வே எனக்கும் உங்களுக்குமிடையே சாட்சியாக இருக்கின்றான்; இந்த குர்ஆன் எனக்கு வஹீயாக அருளப்பட்டுள்ளது. இதைக் கொண்டு உங்களையும், (இதை) அடைந்தவர்களையும் நான் அச்சமூட்டி எச்சரிப்பதற்காக... 6:19
முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன். 33:40
(இவர்களுக்காகவும்), இவர்களுடன் சேராத (பிற்காலத்த)வர்களுக்காகவும், (தூதராக அனுப்பி வைத்தான்) அவன் (யாவரையும்) மிகைத்தவன், ஞானம் மிக்கவன். 62:3
அல்குர்ஆனுடன், அல்லாஹ்வின் இறுதித் தூதர் நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்வியல் நடைமுறைகளையும் அப்படியே முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று வல்ல இறைவன் திருமறையின் பல வசனங்களில் வலியுறுத்திக் கூறுகிறான். மேலும் அதில் தான் முழு (இம்மை, மறுமை) வெற்றியுள்ளது என்றும் கூறுகிறான். மேலும் நாம் (முஸ்லிம்கள், முஃமின்கள்) நபி (ஸல்) அவர்களைத் தான் பின்பற்றியாக வேண்டும். அவர்களின் வழிகாட்டுதல் தவிர வேறு சரியான வழிகாட்டுதல் ஏதும் இல்லை என்பதை கீழ் காணும் நபிமொழி விளக்குகிறது.
உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் தௌராத்தின் ஒரு பகுதியைக் கொண்டு வந்து இறைத்தூதர் அவர்களே! இது தௌராத்தின் ஒரு பகுதியாகும் என்று கூறினார்கள். நபி (ஸல்)அவர்கள் பேசாதிருந்தார்கள். உமர்( ரலி) அவர்களோ அதைப் படிக்கத் துவங்கினார்கள். நபி(ஸல்) அவர்களின் முகமோ (கோபத்தால்) மாறத் தொடங்கியது. அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள் உம்மைக் கஷ்டங்கள் (வந்து) அடையட்டும் நீர் நபி (ஸல்) அவர்களின் முகத்தைப் பார்க்க வில்லையா? என்று கேட்டார்கள், நபி (ஸல்) அவர்களின் முகத்தைப் பார்த்த உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் கோபத்தை விட்டும், அவனுடைய தூதரின் கோபத்தை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன் அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை நபியாகவும் நான் ஒப்புக் கொண்டேன் என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் இந்த முஹம்மதின் உயிரை கையில் வைத்திருப்பவனின் மீது சத்தியமாக மூஸா (அலை) உங்களிடையே வந்து என்னை விட்டு விட்டு அவரை நீங்கள் பின்பற்றினால் நீங்கள் நேர் வழியை விட்டும் (விலகிப்) போய்விடுவீர்கள். மூஸா (அலை) உயிருடன் இருந்து என்னை நபியாக அவர் அடைந்தால் அவர் என்னைத்தான் நிச்சயமாகப் பின்பற்றியிருப்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஜாபிர் (ரலி) தாரமி.
சொற்களில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம், நேர்வழியில் சிறந்தது முஹம்மத் (ஸல்) அவர்களின் நேர்வழியே, காரியங்களில் மிகக் கெட்டது (மார்க்கத்தில்) புதிதாக உண்டாக்கப்பட்டதாகும், புதிதாக உண்டாக்கப்பட்ட ஒவ்வொன்றும் வழி கேடாகும், வழி கேடுகளைனைத்தும் நரகில் கொண்டு சேர்க்கும் என்று நபி( ஸல்) அவர்கள் கூறினார்கள். ஜாபிர் (ரலி) நஸயீ.
அல் அல்குர்ஆனின் தன்மைகள்...
நபி (ஸல்) அவர்களுக்கு இறங்கியது... 6:92,38:29,42:7
அரபி மொழியில் இறக்கப்பட்டது... 41:3,42:7,43:3
அல்லாஹ்விடம் தாய் நூ(லவ்ஹூல் மஹ்ஃபூ)லில் உள்ளது... 43:4
சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது... 2:2,23
முதன்முதலில் ரமலானில் இறங்கியது... 2:185,97:1-3
முரண்பாடற்றது... 4:82
கோணலற்றது... 39:28
உண்மையானது... 4:105
இணையற்றது... 17:88,2:23,52:54
நல்லுபதேசம்... 10:57
அருள் - மருந்து... 17:82,10:57,7:203,31:3,45:20
வழிகாட்டி - மருந்து... 41:44
பேரொளி... 15:15,42:52,64:8
உபதேசம்... 3:138,10:57
பாக்கியமுடையது... 6:92,21:50,38:28
சிந்தனையைத் தூண்டுவது... 13:19,17,41
முஃமின்களுக்கு நன்மாராயம்... 2:97,46:12
எளிதில் விளங்கக் கூடியது... 54:17,22,32,40
தெளிவானது... 2:99,16:89,57:9
அச்சமூட்டி எச்சரிக்கை செய்வது... 6:19,19:97,32:3,36:6,
பிரித்தறிவிக்கக் கூடியது... 2:285,25:1
வேதத்தை நம்பக்கூடியவர்களின் நிலை... 2:177,6:92,43:69,47:2
வேதத்தை நிராகரிப்பவர்களின் நிலை... 2:85,99,34,31:7
வேதத்தை மறைப்பவர்களின் நிலை... 2:159:174
வேதத்தைப் பின்பற்றாதோர் நிலை...
எவர்கள் தவ்றாத் (வேதம்) சுமத்தப்பெற்று பின்னர் அதன்படி நடக்கவில்லையோ, அவர்களுக்கு உதாரணமாவது ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு ஒப்பாகும்; எச்சமூகத்தார் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின் உதாரணம் மிகக் கெட்டதாகும் - அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். 62:5
Thursday, May 24, 2007
வேதங்களை நம்புவது! (பாகம்-2)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment