Thursday, May 24, 2007

ஈமானின் நிலைகள்-மலக்கு(வானவர்)களை நம்புவது

(நம்முடைய) தூதர் தம் இரட்சகனிடமிருந்து தமக்கு இறக்கிவைக்கப்பட்ட(வேதத்)தை விசுவாசிக்கின்றனர். (அவ்வாறே மற்ற) விசுவாசிகளும் (விசுவாசிக்கின்றனர் இவர்கள்) ஒவ்வொருவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதத்தையும், அவனுடைய தூதர்களையும் விசுவாசிக்கின்றனர். அவனுடைய தூதர்களில் எவருக்கிடையிலும் நாங்கள் வேற்றுமை படுத்திவிட மாட்டோம் (என்றும்) மேலும் (இரட்சகனே! உன் வேத வசனங்களை) நாங்கள் செவியுற்றோம். இன்னும் (உன் கட்டளைக்கு) நாங்கள் கீழ்படிந்தோம். எங்கள் இரட்சகனே! நாங்கள் உனது மன்னிப்பைக் கோருகின்றோம். உன்பக்கமே (எங்களுடைய) மீட்சி உள்ளது என்றும் கூறுகின்றார்கள். 2-285.

ஒரு நாள் நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் நாங்கள் அமர்ந்திருந்த பொழுது மிகக் கருமையான முடியுடைய தூயவெண்ணிற ஆடை அணிந்த மனிதர் ஒருவர் எங்களிடம் வந்தார். அவரிடம் பிரயாணத்தின் அடையாளம் எதுவும் காணப்படவில்லை. எங்களில் எவரும் அவரை அறிந்திருக்கவில்லை. அவர் நபி (ஸல்) அவர்களின் அருகில் சென்று அமர்ந்தார். தம் இரு முட்டுக்கால்களையும் அவர்களின் முட்டுக்கால்களுடன் சேர்த்து வைத்தார். தம் இரு கரங்களையும் தம் இரு தொடைகளின் மீது வைத்தார். அவர் நபி (ஸல்) அவர்களை நோக்கி முஹம்மதே! இஸ்லாத்தைப் பற்றி எனக்கு அறிவித்துத் தாருங்கள் என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்)அவர்கள் வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் திருத்தூதர் என்று நீர் சாட்சி பகர்வதும், தொழுகையை நிலை நாட்டுவதும், ஜகாத்துக் கொடுப்பதும், ரமலானில் நோன்பு நோற்பதும், வழிப்பயண சக்திப் பெற்றிருந்தால் ஹஜ் செய்வதும் இஸ்லாமாகும் எனக் கூறினார்கள்.

அதற்கு அவர் உண்மை உரைத்தீர் என்றார். பின்னர் அவர் எனக்கு ஈமானைப் பற்றி அறிவித்துத் தாருங்கள் என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீர் அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும், வேதங்களையும், திருத்தூதர்களையும், மறுமைநாளையும், விதியையும் நீர் நம்பிக்கைக் கொள்வது தான் ஈமான் எனக் கூறினார்கள். அதற்கவர் உண்மை உரைத்தீர் என்றார் பின்னர் இஹ்ஸான் என்றால் என்ன? என்று வினவ அல்லாஹ்வை நீர் பார்ப்பது போல் பயபக்தியுடன் வணங்க வேண்டும். நீர் அவனைப் பார்க்கவில்லையென்றாலும் அவன் உம்மைப் பார்க்கிறான் இதுவே இஹ்ஸான் ஆகும் எனக் கூறினார்கள். உமர் (ரலி) முஸ்லிம்-

மலக்குகளின் உருவ அமைப்பு!

அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும். அவன் வானங்களையும் பூமியையும் ஆரம்பமாகப் படைத்தவன். இரண்டிரண்டும் , மும்மூன்றும், நன்நான்கும், இறக்கைகளுடைய மலக்குகளைத் தூதர்களாக ஆக்கியவன். அவன் நாடியதை(த் தன்) படைப்பில் (பின்னும்) அதிகப்படுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையோன். 35:1.

நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரில் (அலை) அவர்களை முழு(உண்மை)யான தோற்றத்தில் கண்டார்கள். அவர்களுக்கு அறுநூறு இறக்கைகள் இருந்தன. ஆயிஷா (ரலி) முஸ்லிம்.

மலக்குகள் எதனால் படைக்கப் பட்டவர்கள்?

ஜின்கள் நெருப்பினாலும், மலக்குகள் ஒளியினாலும் படைக்கப்பட்டவர்கள். ஆயிஷா (ரலி) முஸ்லிம்.

மலக்குகளின் உருவ அமைப்பு!

அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும். அவன் வானங்களையும் பூமியையும் ஆரம்பமாகப் படைத்தவன். இரண்டிரண்டும் , மும்மூன்றும், நன்நான்கும், இறக்கைகளுடைய மலக்குகளைத் தூதர்களாக ஆக்கியவன். அவன் நாடியதை(த் தன்) படைப்பில் (பின்னும்) அதிகப்படுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையோன். 35:1.

நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரில் (அலை) அவர்களை முழு(உண்மை)யான தோற்றத்தில் கண்டார்கள். அவர்களுக்கு அறுநூறு இறக்கைகள் இருந்தன. ஆயிஷா (ரலி) முஸ்லிம்.

மலக்குகளைக் காண முடியுமா?

நபிமார்களிடமும், நல்லடியார்களில் அல்லாஹ் நாடியவர்களிடமும் மனித உருவில் வந்துள்ளார்கள்

நிச்சயமாக நம் தூதர்கள் (வானவர்கள்) இப்றாஹீமுக்கு நற்செய்தி (கொண்டு வந்து) 'ஸலாம்' (சொன்னார்கள்; இப்றாஹீமும் ''ஸலாம்'' (என்று பதில்) சொன்னார்; (அதன் பின்னர் அவர்கள் உண்பதற்காக) பொரித்த கன்றின் (இறைச்சியைக்) கொண்டு வருவதில் தாமதிக்கவில்லை.11:69

ஆனால், அவர்களுடைய கைகள் அதன் (உணவின்) பக்கம் செல்லாததைக் கண்டு, அவர் அவர்களைப் பற்றி ஐயப்பட்டார், அவர்கள் மீது அவருக்குப் பயமும் ஏற்பட்டுவிட்டது (ஆனால்) அவர்களோ (அவரைப் பார்த்து) ''பயப்படாதீர்! நிச்சயமாக நாங்கள் லூத்துடைய சமூகத்தார்பால் அனுப்பப்பட்டிருக்கிறோம்'' என்று கூறினார்கள்.11:70

மேற்காணும் திருமறை வசனங்களில் இப்றாஹீம்(அலை) அவர்களிடமும்

நம் தூதர்கள் (வானவர்கள்) லூத்திடம் வந்தபோது, (தம்) மக்களுக்கு அவர் பெரிதும் விசனமடைந்தார்; (அதன் காரணமாக) உள்ளம் சுருங்கியவராக ''இது நெருக்கடி மிக்க நாளாகும்'' என்று கூறினார்.11:77

அவருடைய சமூகத்தார் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள்; இன்னும் முன்னிருந்தே அவர்கள் தீய செயல்களே செய்து கொண்டிருந்தார்கள். (அவர்களை நோக்கி லூத்) ''என் சமூகத்தார்களே! இதோ இவர்கள் என் புதல்விகள்; இவர்கள் உங்களுக்கு(த் திருமணத்திற்கு)ப் பரிசத்தமானவர்கள்; எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; இன்னும் என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள்; நல்ல மனிதர் ஒருவர் (கூட) உங்களில் இல்லையா?'' என்று கூறினார்.11:78

(விருந்தினராக வந்த வானவர்கள்) கூறினார்கள்; ''மெய்யாகவே நாம் உம்முடைய இறைவனின் தூதர்களாகவே இருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள் உம்மை வந்தடைய முடியாது எனவே இரவின் ஒரு பகுதி இருக்கும் போதே உம் குடும்பத்துடன் (இவ்வூரை விட்டுச்) சென்றுவிடும்! உம்முடைய மனைவியைத் தவிர, உங்களில் யாரும் திரும்பியும் பார்க்க வேண்டாம். நிச்சயமாக அவர்களுக்கு வரக்கூடிய ஆபத்து அவளையும் பிடித்துக் கொள்ளும். (வேதனை வர) அவர்களுக்கு நிச்சயமாக வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற் காலையாகும்; விடியற் காலை சமீபித்து விடவில்லையா?'' 11:81

மேற்காணும் திருமறை வசனங்களில்; லூத்(அலை) அவர்களிடமும்

அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து ''நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்;. அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்'' எனக் கூறினர்.3:39

மேற்காணும் திருமறை வசனங்களில் ஜக்கரியா(அலை) அவர்களிடமும்

அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரயீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார்.19:17

(அப்படி அவரைக் கண்டதும்,) ''நிச்சயமாக நாம் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன்; நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (நெருங்காதீர்)'' என்றார்.19:18

''நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்'') என்று கூறினார்.19:19

மேற்காணும் திருமறை வசனங்களில் மர்யம்(அலை) அவர்களிடமும்

ஒரு நாள் நபி(ஸல்)அவர்களின் சமூகத்தில் நாங்கள் அமர்ந்திருந்த பொழுது மிகக் கருமையான முடியுடைய தூயவெண்ணிற ஆடை அணிந்த மனிதர் ஒருவர் எங்களிடம் வந்தார். அவரிடம் பிரயாணத்தின் அடையாளம் எதுவும் காணப்படவில்லை. எங்களில் எவரும் அவரை அறிந்திருக்க வில்லை. அவர் நபி (ஸல்) அவர்களின் அருகில் சென்று அமர்ந்தார். தம் இரு முட்டுக்கால்களையும் அவர்களின் முட்டுக்கால்களுடன் சேர்த்து வைத்தார். தம் இரு கரங்களையும் தம் இரு தொடைகளின் மீது வைத்தார். அவர் நபி (ஸல்) அவர்களை நோக்கி முஹம்மதே! இஸ்லாத்தைப் பற்றி எனக்கு அறிவித்துத் தாருங்கள் என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்)அவர்கள் வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மது (ஸல்)அல்லாஹ்வின் திருத்தூதர் என்று நீர் சாட்சி பகர்வதும், தொழுகையை நிலை நாட்டுவதும், ஜகாத்துக் கொடுப்பதும், ரமலானில் நோன்பு நோற்பதும், வழிப்பயண சக்திப் பெற்றிருந்தால் ஹஜ் செய்வதும் இஸ்லாமாகும் எனக் கூறினார்கள்.

அதற்கு அவர் உண்மை உரைத்தீர் என்றார். பின்னர் அவர் எனக்கு ஈமானைப் பற்றி அறிவித்துத் தாருங்கள் என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீர் அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும், வேதங்களையும், திருத்தூதர்களையும், மறுமைநாளையும், விதியையும் நீர் நம்பிக்கைக் கொள்வது தான் ஈமான் எனக் கூறினார்கள். அதற்கவர் உண்மை உரைத்தீர் என்றார் பின்னர் இஹ்ஸான் என்றால் என்ன? என்று வினவ அல்லாஹ்வை நீர் பார்ப்பது போல் பயபக்தியுடன் வணங்க வேண்டும். நீர் அவனைப் பார்க்கவில்லையென்றாலும் அவன் உம்மைப் பார்க்கிறான் இதுவே இஹ்ஸான் ஆகும் எனக்கூறினார்கள். உமர் (ரலி) முஸ்லிம்

மேற்காணும் ஹதீஸில் நபி (ஸல்) அவர்களிடமும் மலக்குகள் மனித உருவில் வந்துள்ளதை அறிகிறோம்

நபிமார்கள் அல்லாஹ்வின் நேரடிக் கண்காணிப்பில் இறைச் செய்தியைப் பெறக்கூடியவர்களாகவும், மக்களுக்கு மார்க்கத்தைப் போதிக்கக் கூடியவர்களாகவும், இருந்ததால் மலக்குகளை மனித உருவில் அனுப்பி தன் செய்தியை, போதனையை (அல்லாஹ்) அவர்களுக்குச் சொன்னான். நபிமார்களும், அவர்களுடன் இருந்தவர்களும், அல்லாஹ் தேர்ந்தெடுத்துக் கொண்ட நல்லடியார்களும் மலக்குகளை மனித உருவில் கண்டனர். நபி (ஸல்) அவர்கள் இறுதித் தூதர் என்பதால் மலக்குகள் வர மாட்டார்கள் அப்படியே வந்தாலும் நாம் அடையாளம் காண முடியாது என்றே கருத வேண்டியுள்ளது.

மலக்குகளின் எண்ணிக்கை.

நபி(ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணத்தில் மக்காவிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸா சென்று அங்கிருந்து ஜிப்ரயீல் (அலை) அவர்களுடன் 'புராக்' என்னும் வாகனதத்pன் மூலம் ஒவ்வொன்றாக ஏழு வானங்ளையும் கடந்து சென்று 'சித்ரத்துல் முன்தஹா' என்ற இலந்தை மரத்தை (அது தான் எல்லை) அடைந்து அல்லாஹ்விடம் உரையாடினார்கள். அங்கு (எல்லையில்) பைத்துல் மஃமூர் என்னும் பள்ளி உள்ளது அதில் ஒரே நேரத்தில் எழுபதாயிரம் (70,000) மலக்குகள் நுழைவார்கள் ஒரு முறை நுழைந்தவர் மறு முறை நுழையமாட்டார்கள்...(ஹதீஸின் கருத்து) ஆயிஷா (ரலி) முஸ்லிம்.

மேற்காணும் ஹதீஸின் மூலம் மலக்குகளின் எண்ணிக்கையை கணக்கிட்டுக் கூற முடியாது என்பதை அறிகிறோம்.

மலக்குகளின் பெயர்கள்.

திருமறை வசனங்கள் மற்றும் நபிமொழிகளில் பெயருடன் கூறப்பட்டவர்களை பெயருடனும், மற்றவர்களைப் பொதுவாகவும் அப்படியே நம்ப வேண்டும்.

ஜிப்ரீல்(அலை) மலக்குகளின் தலைவர், நபிமார்களுக்கு வஹீ (இறைச் செய்தி)யைக் கொண்டு வருபவர்

நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரயீல் மூலம் வந்த) சொல்லாகும்.81:19

(அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர்.81:20

(வானவர் தம்) தலைவர் அன்றியும் நம்பிக்கைக்குரியவர்.81:21

மேலும், நிச்சயமாக இ(ந்த வேதமான)து அகிலங்களின் இறைவனால் இறக்கி வைக்கப்பெற்றது. 26:192

ரூஹுல் அமீன் (எனும் ஜிப்ரயீல்) இதைக் கொண்டு இறங்கினார். 26:193

மிக்காயீல் (அலை) - மழையைக் கொண்டு வருதல்

இஸ்ராஃபீல் (அலை) - சூர் (எக்காளம்) ஊதுதல்

மாலிக் (அலை) நரகக் காவலர்களின் தலைவர்

மேலும், அவர்கள் (நரகத்தில்) ''யா மாலிக்'' உமது இறைவன் எங்களை முடித்து விடட்டுமே!'' என்று சப்தமிடுவார்கள்; அதற்கு அவர் ''நிச்சயமாக நீங்கள் (இங்கு) நிலைத்து இருக்க வேண்டியவர்களே'' என்று கூறுவார்.43:77

மலக்குல் மௌத்...(இஸ்ராயீல்)?

ஆகவே (நபியே!) நீர் கூறுவீராக உங்களுக்கென நியமனம் செய்யப்பட்டிருக்கும் மலக்குல் மௌத் (ஆகிய வானவர் தான்) உங்களுடைய உயிரைக் கைப்பற்றுவார். பின்னர் (மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு) உங்கள் இரட்சகனிடமே நீங்கள் திருப்பிக் கொண்டு வரப்படுவீர்கள்.32:11.

அவன் தன் அடியார்களை அடக்கியாளுபவனாக இருக்கிறான்; அன்றியும், உங்கள் மீது பாதுகாப்பாளர்களையும் அனுப்புகிறான்; உங்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால், நம் அமரர்கள் அவர் ஆத்மாவை எடுத்துக் கொள்கிறார்கள் - அவர்கள் (தம் கடமையில்) தவறுவதில்லை.6:61

பெரும்பாலான மக்கள் கூறுவது போல் உயிரைப் பறிக்கும் மலக்கிற்கு' இஸ்ராயீல் 'என்ற பெயர் திருமறையிலோ , ஹதீஸ்களிலோ இல்லை. 'மலக்குல் மௌத்' என்றுதான் திருமறையில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. ஒரே ஒரு மலக்கு என்று கூறாமல் உங்களுக்கென நியமிக்கப் பட்டிருக்கும் மலக்கு என்பதிலிருந்தே பல (தனித்தனி) மலக்குகள் என்று புரிந்து கொள்ள முடிகிறது.(காண்க:16:28,32,8:50)

மலக்குகளின் இயற்கைத் தன்மைகள்.

விசுவாசிகளே! நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் (நரக) நெருப்பை விட்டும் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமாகும். அதில் (குணத்தால்) கடின சித்தமுடைய (தோற்றத்தாலும், அமைப்பாலும்) பலசாலிகளான மலக்குகள் உள்ளனர். அல்லாஹ்விற்கு - அவன் அவர்களை ஏவியவற்றில் அவர்கள் மாறு செய்யமாட்டார்கள். (இரட்சகனிடமிருந்து) அவர்களுக்குக் கட்டளையிடப்படுவதைச் செய்வார்கள். 66:6.

வானங்களிலும் பூமியிலும் உள்ளோரெல்லாம் அவனுக்கே உரியோராவார்கள்; மேலும் அவனிடம் இருப்பவர்கள் அவனுக்கு வணங்குவதை விட்டுப் பெருமையடிக்க மாட்டார்கள்; சோர்வடையவும் மாட்டார்கள்.21:19

இடைவிடாமல் அவர்கள் இரவிலும், பகலிலும் அவனைத் துதித்துக் கொண்டே இருக்கிறார்கள்.21:20

அவர்கள் ''(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்'' எனக் கூறினார்கள்.2:32

மலக்குகள் மனிதர்களைப் போன்றல்லாமல் இறைவன் இட்ட கட்டளையை அப்படியே ஏற்று நடப்பார்கள்.

மலக்குகள் உண்பது, பருகுவது, உறங்குவது இல்லை.

அவர்கள் அவரிடம் நுழைந்தபொழுது சாந்தி உண்டாவதாக என்று கூறினார்கள். (அதற்கு இபுறாஹீம் உங்களுக்கும்) சாந்தி உண்டாவதாக என்று கூறி (இவர்கள் நமக்கு) அறிமுகமில்லாத சமூகத்தார் (என்று தன் மனதில் எண்ணிக்கொண்டு.)51-25.

பின்னர் தன் இல்லத்தாரிடம் விரைவாகச் சென்று (நெருப்பில் சுடப்பட்ட) கொழுத்த காளைக் கன்றைக் கொண்டு வந்தார்.51-26.

பின்னர் அதனை அவர்கள் அருகில் வைத்தார்(அவர்கள் உண்ணாததால் )அவர்களிடம் நீங்கள் உண்ணமாட்டீர்களா என்று கேட்டார்.51-27.

(பின்னும் புசிக்காமல் இருந்ததால் தன் மனதில்) அவர்கள் பற்றிய பயத்தை உணர்ந்தார் அப்போது (இப்றாஹீமே!) நீர்பயப்படாதீர், என்று அவர்கள் கூறினர்...51-28.

மலக்குகளைப் பகைவர்களாகக் கருதக்கூடாது.

(உங்களில்)எவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய வானவர்களுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும், பகைவராக இருக்கிறாரோ (அத்தகைய) நிராகரிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ் பகைவனாக இருக்கிறான்.2:98.

மலக்குகள் அல்லாஹ்வின் (பெண்) பிள்ளைகளல்ல!

மக்காவிலிருந்த இறை நிராகரிப்பாளர்கள் மலக்குகளை அல்லாஹ்வின் (பெண்) பிள்ளைகளாகக் கருதினார்கள் என்பதையும் அது தவறு என்றும் கூறி அல்லாஹ் தன் திருமறையில் கண்டிக்கிறான். மேலும் நம் நாட்டில் இன்றைய கால கட்டத்திலும் வானவர்கள் என்பதைக் குறிக்க தேவதைகள் என்று கூறுவதையும் நாம் அறிவோம். அது முஸ்லிம்களைப் பொறுத்த வரை தவறான ஏற்க முடியாத கருத்து.

(முஷ்ரிக்குகளே!) உங்கள் இறைவன் உங்களுக்கு ஆண் மக்களை அளித்து விட்டு (தனக்கு மட்டும்) மலக்குகளிலிருந்து பெண் மக்களை எடுத்துக்கொண்டானா? நிச்சயமாக நீங்கள் மிகப்பெரும் (பொய்க்) கூற்றையே கூறுகிறீர்கள்.17:40

(நபியே!) அவர்களிடம் கேளும்; உம் இறைவனுக்குப் பெண் மக்களையும் அவர்களுக்கு ஆண்மக்களையுமா (கற்பனை செய்கிறார்கள்) என்று. 37:149

அல்லது நாம் மலக்குகளைப் பெண்களாகவா படைத்தோம்? (அதற்கு) அவர்கள் சாட்சிகளா? 37:150

''அறிந்து கொள்க! நிச்சயமாக இவர்கள் தங்கள் கற்பனையில் தான் கூறுகின்றனர்.'' 37:151

''அல்லாஹ் பிள்ளைகளைப் பெற்றான்'' (என்று கூறுபவர்கள்) நிச்சயமாகப் பொய்யர்களே! 37:152

(அன்றியும், அல்லாஹ்) அவன் ஆண்மக்களை விட்டுப் பெண்மக்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானா? 37:153

நிச்சயமாக மறுமையைப் பற்றி நம்பவில்லையே அத்தகையோர் - அவர்கள் மலக்குகளுக்கு பெண்களின் பெயரைச் சூட்டுகின்றனர்.53:27.

மேலும் இறந்து போகக் கூடியவர்களுக்குத்தான் வாரிசு தேவைப்படும். அல்லாஹ்வோ நித்திய ஜீவன் ஆகையால் அவனுக்கு வாரிசு தேவையில்லை.

அல்லாஹ் - அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன்;, அவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்கா, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன...2:255

அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.112:2

அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.112:3

மலக்குகளை வணங்கக் கூடாது.

மேலும், மலக்குகளையும், நபிமார்களையும் (வணக்கத்திற்குறிய தெய்வங்களாக) ரப்புகளாக எடுத்துக்கொள்ளுங்கள் என்றும், உங்களுக்கு அவர் கட்டளையிடமாட்டார். (அல்லாஹ் ஒருவனுக்கே) நீங்கள் முற்றிலும் கீழ்படிந்தவர்களாக (முஸ்லிம்களாக) ஆனதன் பின்னர் (அதனை நிராகரிக்கும்படி உங்களுக்கு அவர் கட்டளையிடுவாரா?. 3-80.

மலக்குகளின் பணிகள்

அல்லாஹ்வை துதித்தல் (தஸ்பீஹ்)...

இடியும் அவனது புகழைக் கொண்டு துதிக்கிறது. (அவ்வாறே) அவனின் பயத்தால் மலக்குகளும் (அவனைத் துதி செய்கின்றனர்.) அவனே இடிகளையும் அனுப்புகிறான், (பின்னர்) அவன் நாடியவர்களை அதைக் கொண்டு அவன் (தாக்கிப்) பிடிக்கச் செய்கிறான். அவர்களோ அல்லாஹ்வைப் பற்றி (உம்மிடம்) தர்க்கம் செய்கின்றனர். மேலும் (அவர்களை தண்டிக்க நாடினால், அவர்களை நழுவாது பிடிப்பதில்) அவன் பலமிக்கவன்.13:13.

மேலும், அர்ஷை சுற்றிச் சூழ்ந்தவர்களாக மலக்குகளை (நபியே! அந்நாளில்) நீர் காண்பீர், அவர்கள் தங்கள் இரட்சகனின் புகழைக் கொண்டு துதித்துக் கொண்டிருப்பார்கள்...39:75

அல்லாஹ்வின் அர்ஷை சுமத்தல் ...

மேலும், அர்ஷை சுற்றிச் சூழ்ந்தவர்களாக மலக்குகளை (நபியே! அந்நாளில்) நீர் காண்பீர், அவர்கள் தங்கள் இரட்சகனின் புகழைக் கொண்டு துதித்துக் கொண்டிருப்பார்கள்...39:75

இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள், அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள்.69:17

வஹீ (எனும் இறைச் செய்தி)யைக் கொண்டுவருதல்...

அல்லாஹ் - மலக்குகளிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் தூதர்களை - அவன் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்கிறவன், பார்க்கிறவன்.22:75.

மேலும், நிச்சயமாக இ(ந்த வேதமான)து அகிலங்களின் இறைவனால் இறக்கி வைக்கப்பெற்றது.26:192

ரூஹுல் அமீன் (எனும் ஜிப்ரயீல்) இதைக் கொண்டு இறங்கினார். 26:193

சாந்தியும் ,நல்லருளும் கொண்டு வருதல் ...

அதில் மலக்குகளும், (ஜிப்ரீலாகிய பரிசுத்த)ஆவியும் தங்கள் இரட்சகனின் கட்டளையின்படி (நடைபெற வேண்டிய) ஒவ்வொரு காரியத்தின் நிமிர்த்தம் இறங்குகின்றனர்.97:4.

(அது) சாந்தியா(ன இரவா)கும்,அ(வ்விரவான)து, அதிகாலை உதயமாகும் வரையிலாகும்.97:5.

படைப்பினங்களின் அமலைக் கண்காணித்து எழுதுதல்...

நிச்சயமாக, உங்கள் மீது பாதுகாவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.82:10

(அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள்.82:11

நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.82:12

(மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது-.50:17

கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை.50:18

பூமியில் உள்ளோர்க்கு பாவமன்னிப்புத் தேடுதல் ...

(அல்லாஹ்வின் மகத்துவத்தால்) வானங்கள் - அவற்றின் மேற்புறத்திலிருந்து பிளந்து விட சமீபிக்கும், மலக்குகளும் (பயந்து) தங்களிரட்சகனின் புகழைக் கொண்டு துதி செய்து, பூமியில் உள்ளவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுகின்றனர். நிச்சயமாக அல்லாஹ்வே, மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையோன் என்பதை (நபியே! நீர்) அறிந்துகொள்வீராக!.:42:5.

உதவி புரிதல் ...

ஆம் நீங்கள் பொறுமையுடனிருந்து (அல்லாஹ்வுக்கு) பயந்தும் கொள்வீர்களானால், அந்நேரத்திலேயே உங்களிடம் (உங்களைத் தாக்க) அவர்கள் வந்தபோதிலும் (மூவாயிரமென்ன?) போர்க்குறிகள் கொண்டவர்களான மலக்குகளில் ஜயாயிரத்தைக் கொண்டு உங்கள் இரட்சகன் உங்களுக்கு உதவி செய்வான். 3:125.

(நினைவு கூறுங்கள்;) உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை நாடியபோது ''(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்'' என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான். 8:9

பாதுகாப்பு நல்குதல்...

(மனிதர்களில் ஒவ்வொருவருக்கும்) அவருக்கு முன்னும், அவருக்கு பின்னும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்)பலர் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளையைக் கொண்டு அவரைப் பாதுகாக்கின்றார்கள்...13:11

அவன் தன் அடியார்களை அடக்கியாளுபவனாக இருக்கிறான்; அன்றியும், உங்கள் மீது பாதுகாப்பாளர்களையும் அனுப்புகிறான்; உங்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால், நம் அமரர்கள் அவர் ஆத்மாவை எடுத்துக் கொள்கிறார்கள் - அவர்கள் (தம் கடமையில்) தவறுவதில்லை.6:61

(நிராகரிக்கும்) பாவிகளின் உயிரைப் பறித்தல் ...

நிராகரிப்போ(ரின் உயி)ர் களை மலக்குகள் கைப்பற்றும் சமயத்தில் (நபியே!) நீர் பார்ப்பீராயின், (பயங்கர நிலையை நீர் பார்ப்பீர். மலக்குகளான) அவர்கள், அவர்களின் முகங்களிலும், அவர்களின் பின் புறங்களிலும் அடிப்பார்கள். மேலும், எரிக்கும் (நரக) வேதனையைச் சுவையுங்கள் (என்றுக் கூறுவார்கள்)8:50.

ஆகவே, அவர்களுடைய முகங்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் அடித்து (உயிர்களைக் கைப்பற்றும்) மலக்குகள் அவர்களை மரணமடையச் செய்யும் போது (அவர்கள் நிலைமை) எப்படியிருக்கும். 47:27

அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்பவர்களாக இருக்கும் நிலையில், மலக்குகள் அவர்களுடைய உயிர்களைக் கைப்பற்றுவார்கள்; அப்போது அவர்கள், ''நாங்கள் எந்தவிதமான தீமையும் செய்யவில்லையே!'' என்று (கீழ்படிந்தவர்களாக மலக்குகளிடம்) சமாதானம் கோருவார்கள்; ''அவ்வாறில்லை! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நன்கறிந்தவன்; (என்று மலக்குகள் பதிலளிப்பார்கள்.) 16:28

மூமின்களின் உயிரைப் பறித்தல் ...

அவர்கள் எத்தகையோரென்றால், (ஈமானுடன்)நல்லவர்களாக இருக்கும் நிலையில் மலக்குகள் அவர்)களுடைய உயிர்) களைக் கைப்பற்றுவார்கள். அவர்களிடம் ஸலாமுன் அலைக்கும் (உங்களுக்குச் சாந்தி உண்டாவதாக!) நீங்கள் செய்து கொண்டிருந்ததின் காரணமாக சுவனபதியில் பிரவேசியுங்கள் என்று அவர்கள் கூறுவார்கள்.16:32.

நரகத்தின் காவலர்களாக ...

மேலும், அவர்கள் (நரகத்தில்) ''யா மாலிக்'' உமது இறைவன் எங்களை முடித்து விடட்டுமே!'' என்று சப்தமிடுவார்கள்; அதற்கு அவர் ''நிச்சயமாக நீங்கள் (இங்கு) நிலைத்து இருக்க வேண்டியவர்களே'' என்று கூறுவார்.43:77

அதன் மீது பத்தொன்பது (வானவர்கள் நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.74:30

அன்றியும், நரகக் காவலாளிகளை மலக்குகள் அல்லாமல் நாம் ஆக்கவில்லை. 74:31

சுவனவாசிகளுக்கு சுபச்செய்தி...

''நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்ததற்காக 'ஸலாமுன் அலைக்கும்' (உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக!) உங்களுடைய வீடு மிகவும் நல்லதாயிற்று!'' (என்று கூறுவார்கள்.)13:24

நிச்சயமாக எவர்கள்; ''எங்கள் இறைவன் அல்லாஹ்தான்'' என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள் பால் மலக்குகள் வந்து, ''நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் - உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்'' (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்.41:30

''நாங்கள் உலக வாழ்விலும்,மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள்; மேலும் (சுவர்க்கத்தில்) உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கிறது - அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்.41:31

''மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவனிடமிருந்துள்ள விருந்தாகும்'' (இது என்று கூறுவார்கள்).41:32

சுவனவாசிகள் சுவனத்தில் நுழைந்ததும் ஒரு மலக்கு அனைவரையும் அழைத்து சுவர்க்கவாசிகளே! நிச்சயமாக நீங்கள் இங்கு எப்பொழுதும் ஜீவித்து இருப்பீர்கள். ஒரு போதும் மரணிக்கமாட்டீர்கள். மேலும் நிச்சயமாக நீங்கள் இங்கு எப்பொழுதும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். ஒருபோதும் நோயாளிகளாக ஆகமாட்டீர்கள். மேலும் நிச்சயமாக நீங்கள் இங்கு வாலிபமாகவே இருப்பீர்கள். ஒருபோதும் வயோதிகம் (முதுமை) அடையமாட்டீர்கள். மேலும் நிச்சயமாக நீங்கள் இங்கு சுகத்தை அனுபவித்துக் கொண்டு இருப்பீர்கள். ஒருபோதும் கஷ்டப்படமாட்டீர்கள் எனக் கூறினார்கள். அபூஹூரைரா (ரலி) முஸ்லிம்.

பஜ்ர், அஸர் தொழுகை நேரத்தில் மலக்குகளின் வேலை...

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் இரவின் மலக்குகளும், பகலின் மலக்குகளும் மாறி ,மாறி பூமியில் பொறுப்பு வகிக்கின்றனர். அவர்கள் அனைவரும் பஜ்ர் தொழுகையிலும் அஸர் தொழுகையிலும் பூமியில் ஒன்று சேறுகின்றனர். பிறகு உங்களுடன் இரவில் தங்கியிருந்த மலக்குகள் வானிற்குச் செல்வார். அப்பொழுது அல்லாஹ் அவர்களிடம் கேட்பான் அவனே மிக அறிந்தவன். என் அடியார்களை எந்த நிலையில் விட்டுவிட்டு வந்தீர்கள். அப்பொழுது மலக்குகள் தொழுகிற நிலையில் அவர்களை விட்டு விட்டு வந்தோம். தொழுகிற நிலையில் நாங்கள் அவர்களிடம் சென்றோம் என்று கூறுவார்கள். அபூஹூரைரா (ரலி) புகாரி, முஸ்லிம்.

வீட்டில் நாய், உருவப்படம் இருந்தால்...

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் எவர் வீட்டில் நாயும் உருவப்படமும் இருக்கின்றனவோ அவ்வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள். அபூதல்ஹா (ரலி) புகாரி,முஸ்லிம்.

உருவப் படம், நாய், மற்றும் குளிப்புக் கடமையானவர் இருக்கும் இடங்களில் மலக்குகள் நுழைய மாட்டார்கள். அலி (ரலி) நஸயீ, அபூதாவூத்.

வெங்காயம், பூண்டை(பச்சையாக)த் தின்றால்...

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் யார் வெங்காயத்தையோ, பூண்டையோ சாப்பிடுகிறாரோ அவர் நிச்சயமாக நம் மஸ்ஜிதை நெருங்க வேண்டாம். ஏனெனில் நிச்சயமாக ஆதமின் மக்கள் நோவினையும் செய்யும் பொருள்களிலிருந்து (துர்வாடை போன்றவற்றிலிருந்து) மலக்குகளும் நோவினையடைகின்றனர். ஜாபர் (ரலி) முஸ்லிம்.

கணவன் (உறவு கொள்ள) அழைத்து மனைவி வர மறுத்தால்...

கணவன் தன் மனைவியை இல்லற உறவுக்காக தம் விரிப்புக்கு அழைத்து அவள் வர மறுத்தால், அதனால் அவள் மீது கோபமடைந்தவராக கணவர் அந்த இரவைக் கழித்தால் அன்றுக் காலை வரை மலக்குகள் அந்த மனைவியை சபிக்கிறார்கள். புகாரி, முஸ்லிம்: அபூஹூரைரா (ரலி)

நமக்கும், மலக்குகளுக்கும் உள்ள தொடர்பு...

கருவறையில்...

(மனிதன் தன் தாயின் கருவில் இருக்கும் போது) மூன்றாவது நாற்பது (120வது) நாளில் அல்லாஹ் ஒரு மலக்கை அனுப்பி அக்கருவிற்கு நான்கு விசயங்களை எழுதுமாறு பணிக்கிறான் 1.அவனுடைய செயல்கள் 2.அவனுடைய (ரிஜ்க்) வாழ்வாதாரம் 3.அவனுடைய (தவணை) ஆயுள் 4.அவன் நல்லவனா? கெட்டவனா? அதன் பின்னர் (அவ்வுடலில் ரூஹ்) உயிர் மூச்சு ஊதப்படுகிறது. இப்னு மஸ்வூத் (ரலி) புகாரி, முஸ்லிம்.

உயிர் பறிக்கும் நேரத்தில்...

முஃமினான ஒரு அடியான் உலகத் தொடர்புகளைத் துண்டித்து மறுமையை நோக்கிக் கொண்டிருக்கையில் சூரிய ஒளிக்கொப்பான, பிரகாசமுள்ள முகத்துடன் சில மலக்குகள் அவனிடம் வருவார்கள் சுவர்க்கத்தின் நறுமணத்துடன் கூடிய துணியையும் எடுத்து வருவார்கள், அவர்களில் உயிர் பறிக்கும் மலக்கு அவனிடத்தில் வந்தமர்ந்து உயிரை வெளியேறும்படி கட்டளையிடுவார். அது (உயிர்) தோல்பையிலிருந்து (சுலபமாக) நீர் வெளியேறுவதைப் போல் (மிகச்சுலபமாக) வெளியேறிவிடும்.

நிராகரித்தவனின் மரண வேளை நெருங்கி விட்டால் கருநிற (விகாரமான) முகத்துடன் சில மலக்குகள் அவனிடம் வருவார்கள், அவர்களிடம் கம்பளி துணி ஒன்று இருக்கும். உயிh பறிக்கும் மலக்கு அவனிடம் வந்தமர்ந்து கெட்ட ஆத்மாவே வெளியேறு என்பார் அவ்வுயிர் பயந்து இங்கும், அங்குமிங்குமாக உடலில் ஓட ஆரம்பிக்கும் அப்போது அந்த மலக்கு நனைந்த கம்பளியிலிருந்து முடியை பறிப்பது போல் பலவந்தமாக (சிரமப்பட்டு) பறித்தெடுப்பார் (ஹதீஸின் சுருக்கம்) பராவு இப்னு ஆஸிப் (ரலி) அஹ்மத், அபூதாவூத்.

கல்லறையில்(கப்ரில்)...

உங்களில் ஒருவர் மரணித்து அடக்கம் செய்யப்பட்டவுடன் கரு நிறமான நீல நிறக் கண்களையுடைய இரண்டு மலக்குகள் வருவார்கள். அவர்கள்தான் முன்கர், நகீர் ஆவர். அவர்கள் அம்மனிதனிடம் நபி (ஸல்) அவர்களைப் பற்றி இந்த மனிதரைப் பற்றி என்ன சொல்கிறாய் ? என்று கேட்பார்கள் (முஃமினாக இருந்தால்)அவர் (நபி (ஸல்) அவர்கள்) அல்லாஹ்வின் அடியாரும், தூதரும் ஆவார்கள் என்று கூறுவார். மலக்குகள் அவரிடம் நீ இவ்வாறு கூறுவாய் என்று தெரியும் எனபர். பின் அவருடைய மண்ணறை எழுவது முழம் அளவுக்கு விசாலமாக்கப் படும், ஒளியேற்றி பிரகாசமாக்கப்படும் நீ உறங்குவாயாக! என்று கூறுவார்கள். நான் என் குடும்பத்தினரிடம் சென்று (எனக்குக் கிடைத்துள்ள நற்பாக்கியங்களை) தெரிவித்து விட்டு வருகிறேன் என்று கூறுவார். அதற்கு மலக்குகள் புது மணமகன் போல் உறங்கு, மறுமை வரை உறங்கு என்று கூறுவார்கள்.

மலக்குகள் முனாஃபிக்கிடம் அதே கேள்வியைக் கேட்பார்கள். அதற்கு அம்மனிதன் மக்கள் ஏதேதோ சொல்லக் கேட்டிருக்கிறேன் எனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறுவான். மலக்குகள் நீ இப்படித்தான் கூறுவாய் என்று தெரியும் என்பர். அதனைத் தொடர்ந்து அவனை நெருக்குமாறு பூமிக்கு உத்தரவிடப்படும், அவனுடைய வலது விலா எலும்பு இடது விலா எலும்புடன் பின்னிக் கொள்ளும் (இவ்வாறு) மறுமை வரை வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான்.(ஹதீஸ் சுருக்கம்) அபூஹூரைரா (ரலி) திர்மிதி .

மனிதர்களுக்கும், மலக்குகளுக்குமான தொடர்பு கருவறைத் தொடங்கி கல்லறையையும் தாண்டி மறுமை வரையிலும் தொடர்கிறது. இவையனைத்தும் அல்லாஹ்வும் அவன் தூதர் நபி (ஸல்) அவர்களும் கூறியவைகளாகும். இவையனைத்தும் நம்பிக்கையின் பாற்பட்டதாகும். இதில் எந்த ஒன்றை (நம்ப) மறுத்தாலும் நிராகரித்த குற்றத்திற்கு ஆளாவோம்.

No comments:

 
#b-navbar { height: 0px; visibility: hidden; display: none; }